சென்னை: பெண் காவலர்கள் வசதிக்காக சென்னையில் 5 இடங்களில் பயோ டாய்லெட் திறந்து வைத்தார் மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.
பெண் காவலர்கள் வசதிக்காக சென்னையில் 5 இடங்களில் பயோ டாய்லெட் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. பல்லவன் இல்லம், நேப்பியர் பாலம், உழைப்பாளர் பாலம், உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம் ஆகிய 5 இடங்களில் பெண் காவலர்கள் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனை, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.
அவர் பேசுகையில், போக்குவரத்து மகளிர் காவல் நிலையத்தில் யார் யார் உள்ளனர்களோ அவர்கள் பயன்பெறும் வகையில் பயோ டாய்லெட் திறந்திருக்கிறோம். மகளிருக்காக சென்னையில் முக்கியமான 5 இடங்களில் இந்த பயோ டாய்லெட் வசதி செய்யப்பட்டிருக்கிறது. மகளிர் காவலர்களுக்கு இந்த மாதிரி பயோ டாய்லெட் வசதி இந்தியாவிலேயே முதன் முதலில் டிசைன் செய்யப்பட்டிருக்கு. ஒரு முறை தண்ணீர் நிறப்பினால் 10 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். தினமும் க்ளின் செய்ய தேவை இல்லை.
3 மாதங்களுக்கு ஒரு முறை க்ளீன் செய்தால் போதுமானது. மகளிர் போலீஸ் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் சக்சஸ் ஆகினால், இதனை விரிவு படுத்தலாம். எங்கெல்லாம் போலீஸ் பூத் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த வசதி கொண்டு வரப்படும். சுமார் 2 லட்சம் இதற்கு செலவாகியுள்ளது.இந்த மாதிரி கோடைக்காலத்தில் மகளிர் காவலர்களுக்கு சோலார் தொப்பி, மோர், இளநீர் போன்ற பல வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
முருகனுக்கு பெருமை சேர்த்தது திமுக ஆட்சி: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு
திருப்புவனம் இளைஞர் கொலை : தவெக போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி
திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு... தடையை மீறி போராடுவேன்... சீமான்!
ரெட் அலார்ட்...கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்
பெங்களுருவில் இளைஞரை கடத்திச் சென்று தாக்கிய கும்பலால் பரபரப்பு
அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை: அமைச்சர் கோவி.செழியன்!
சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
வார தொடக்கத்தில் சரிவில் தொடங்கிய தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு!
{{comments.comment}}