தேஜகூ Vs எதிர்க்கட்சிகள்: பெங்களூரில் நாளை கூடும் "24".. டெல்லியில் செவ்வாயில் குவியும் "30"!

Jul 16, 2023,05:22 PM IST
டெல்லி: கிட்டத்தட்ட 30 கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் கூட்டம் அடுத்த வாரம் டெல்லியில் நடைபெறவுள்ளது. அதே வாரத்தில் பெங்களூரில் 24 கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு இப்போதே கட்சிகள் தயாராக ஆரம்பித்து விட்டன. வலுவாக இருப்பதாக  கூறிக் கொள்ளும் பாஜகவே கூட தனது கூட்டணியை பலப்படுத்த ஆரம்பித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அடுத்த வாரம் டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூடவுள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு வருமாறு ஒவ்வொரு கூட்டணிக் கட்சியின் தலைவருக்கும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கடிதம் எழுதி வருகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டம் என்பதால் ஒரு விதமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தங்களது கூட்டணி பலமாக இருப்பதைக் காட்டிக் கொள்ளும் கூட்டமாக பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி வருகிற செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெறுகிறது.



தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டம் அசோகா ஹோட்டலில்  செவ்வாய்க்கிழமை
மாலை நடைபெறும். இதில் புதிதாக சில கட்சிகள் பங்கேற்கின்றன. இவை கூட்டணியில் இல்லாத கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக லோக் ஜன சக்தி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி, விகாஷீல்  இன்சான் கட்சி ஆகியவை பீகாரைச் சேர்ந்தவை. இவை  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவுள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை தற்போது 24 கட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. இதில் பாஜக மட்டுமே பெரிய கட்சியாகும். மற்ற  கட்சிகளில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை குட்டிக் கட்சிகளே.

அதேசமயம், திங்கள்கிழமை பெங்களூரில் ஒரு கூட்டம்  கூடுகிறது. இக்கூட்டத்தில் 24 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இது எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டமாகும். முதல் கூட்டம் சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்றது. தற்போது 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெறுகிறது. முதல் கூட்டத்தில்  15 கட்சிகள் வரை கலந்து கொண்டன. இப்போது அது 24 ஆக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இரு முக்கிய கூட்டணிகளின் ஆலோசனைக் கூட்டம் அடுத்தடுத்து நடைபெறவிருப்பதால் தேசிய அரசியலில் பரபரப்பும் விறுவிறுப்பும் கூடியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்