தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்....6 நாட்களுக்கு மழை தொடரும்

Oct 05, 2024,03:52 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு  அலர்ட் விடுத்து எச்சரித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.


ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு  வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் தற்போது வெக்கை  தணிந்து சற்று குளுமையான சூழல் நிலவி வருகிறது. அதே வேளையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்க உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  இந்த மாவட்டங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அப்பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


அதேபோல் திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை,ஆகிய 11 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழக கடலோரப் பகுதிகள், வங்க கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும்,  இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும் என்பதால் அக்டோபர் ஒன்பதாம் தேதி வரை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை

news

பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

news

Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!

news

ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி

news

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

news

போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ

அதிகம் பார்க்கும் செய்திகள்