CPI (M).. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு

Jan 05, 2025,06:40 PM IST

விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடந்த கட்சியின் 24வது மாநில மாநாட்டின்போது பெ. சண்முகம் புதிய மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்தது.  3வது நாளான இன்று முக்கிய நிகழ்வாக புதிய மாநிலச் செயலாளர் தேர்வு நடைபெற்றது. கட்சியின் 80 உறுப்பினர்கள் அடங்கிய மாநிலக் குழுக் கூட்டத்தில் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


தற்போது கே.பாலகிருஷ்ணன் 2வது முறையாக மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். அவருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு தரப்பட மாட்டாது என்று கூறப்பட்டது. 3 முறை ஒருவர் மாநிலச் செயலாளராக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இன்று புதிய செயலாளராக பெ.சண்முகம் தேர்வாகியுள்ளார்.




திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் பெ.சண்முகம்.  மாணவர் சங்கத்தில் ஆரம்பத்தில் செயல்பட்டு வந்தவர் சண்முகம். பின்னர் படிப்படியாக பல்வேறு நிலைகளில் உயர்ந்து வந்த அவர் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக உள்ளார். 


மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் சண்முகம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் விவசாய பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தவர். வாச்சாத்தி போலீஸ் அத்துமீறல் வழக்கை நீண்ட காலம் விடாமல் நடத்தி வந்தவர் பெ. சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது. மலை வாழ் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு தளங்களில் போராடி வருபவர். 


விழுப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் பொலிட்பீரோ ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், பொலிட்பீரோ உறுப்பினர்கள் பிருந்தா காரத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில மாநாட்டில் பல்வேறு முக்கியத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

news

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

news

கரூர் துயர சம்பவம்... ஹேமமாலினி தலைமையில்... தேஜ கூட்டணியில் 8 பேர் கொண்ட குழு அமைப்பு

news

கரூர் கூட்ட நெரிசல்.. குற்றஞ்சாட்டப்பட்டவர்களே விசாரிக்கக்கூடாது.. சிபிஐ விசாரணை வேண்டும்: அன்புமணி

news

கரூரில் பாதிக்கப்பட்டோரை பார்க்க செல்கிறாரா விஜய்?... பாதுகாப்பு வழங்கக் கோரி மனு

news

டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?

news

கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?

news

கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி

news

யாரைக் குறை கூறுவது...?? யார் மீது குற்றம் சாட்டுவது..?? மக்களுக்கு ஏன் இந்த சினிமா மயக்கம் ..??

அதிகம் பார்க்கும் செய்திகள்