நாக்கின் நுனியில் ஒரு துளி மழைநீரைப் போல!

Aug 26, 2026,06:45 PM IST

- கொடைக்கானல் ப.வினு


பேசுவதற்கு எதுவுமே இருப்பதில்லை

ஆனாலும்

ஏதோ ஒரு தீவிரமான பழக்கத்தின் வழியே

உன் பெயரை

அழைத்துக் கொண்டே இருக்கிறேன்.


அந்தப் பெயரின் கடைசி எழுத்து

என் உதடுகளை விட்டுப் பிரியும் கணத்தில்

இந்த அறையின் அந்தி வெளிச்சத்தில்

ஒரு மெல்லிய நடுக்கம்

வந்து போகிறது.




நாக்கின் நுனியில்

ஒரு துளி மழைநீரைப் போல

அல்லது

விழுந்துவிடத் துடிக்கும்

உலர்ந்த இலை போல

தங்கிவிடுகிறது உன் பெயர்.


என்ன?" என்று நீ

திரும்பிப் கேட்கும் போது

சொல்வதற்கு ஒரு காரணமும் இல்லாமல்

ஏதோ ஒரு பொய்யைத் தேடித் தோற்கிறேன்.


உண்மையில்

உன் பெயர் என்பது

உன்னை அழைப்பதற்காக அல்ல.

பேச ஒன்றுமற்ற இந்தத் தனிமையில்,


நான் இன்னும்

உயிருடன்தான் இருக்கிறேன் என்பதை

எனக்கே

நிரூபித்துக் கொள்வதற்காகத்தான்.


(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்