தம்பா, புளோரிடா: அமெரிக்காவுக்குச் சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் அங்கு நடந்த நிகழ்ச்சியின்போது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி பாதி உலகத்தை அழித்து விடுவோம். எங்களுக்குத் தண்ணீர் வருவதைத் தடுக்க , சிந்து நதியில் இந்தியா எதையாவது கட்டினால் அதைத் தகர்த்து தரை மட்டமாக்குவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தம்பா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிம் முனீர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசுகையில் அணு ஆயுதப் போர் குறித்த எச்சரிக்கையை விடுத்தார். அப்போது இந்தியாவையும் அவர் கடுமையாக மிரட்டினார். அணு ஆயுதங்களைக் கொண்டு இந்தியாவை அழித்து விடுவோம் என்று அவர் எச்சரித்தார்.
ஆசிம் முனீர் பேச்சிலிருந்து:

இந்தியாவுடன் எதிர்காலத்தில் போர் ஏற்பட்டால், பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், “உலகத்தின் பாதியை அழித்துவிடுவோம். நாங்கள் ஓர் அணு ஆயுத நாடு. நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால், உலகத்தின் பாதியை எங்களுடன் அழிப்போம்,.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி, இந்தியா சிந்து நதியின் குறுக்கே அணை கட்டினால், பாகிஸ்தானுக்கு நீர்வரத்து தடைபடும். அவ்வாறு இந்தியா அணை கட்டினால் அதை 10 ஏவுகணைகள் மூலம் அழித்துவிடுவோம். பாகிஸ்தானிடம் ஏவுகணைகளுக்குப் பஞ்சமில்லை. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததால், 250 மில்லியன் மக்கள் பசியால் வாடும் அபாயம் உள்ளது.
இந்தியா அணை கட்டுவதற்காக நாங்கள் காத்திருப்போம், அணை கட்டியதும், அதை 10 ஏவுகணைகள் மூலம் அழித்துவிடுவோம்.. சிந்து நதி இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல என்று அவர் பேசியுள்ளார்.
அமெரிக்க மண்ணிலிருந்து ஒரு மூன்றாவது நாட்டுக்கும், உலக நாடுகளுக்கும் அணு ஆயுத எச்சரிக்கையை விடுத்து ஒரு ராணுவத் தளபதி பேசுவது இதுவே முதல் முறையாகும். இதை எப்படி அமெரிக்க அதிகாரிகள் அனுமதித்தார்கள் என்பது வியப்பாக உள்ளது. இந்தியாவை அழிப்போம், உலகத்தை அழிப்போம் என்று இன்னொரு நாட்டின் ராணுவ தளபதி அமெரிக்க மண்ணிலிருந்து பேசியது உலக நாடுகளை பரபரப்பாக்கியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக அமெரிக்காவிற்கு வருகை புரிந்தார். அவரது கடைசிப் பயணத்தின்போது, ஜூன் 18 அன்று அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் மதிய உணவு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்போது ஈரான் - இஸ்ரேல் போர் உச்சத்தில் இருந்தது. அந்த வருகையின்போது, ட்ரம்பின் அமைதி முயற்சிகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார் ஆசிம் முனீர். இந்தப் பரிந்துரையை ப்ளோரிடா நிகழ்விலும் மீண்டும் வலியுறுத்தினார்.
புளோரிடா நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வம்சாவளியினர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}