கராச்சி: பாகிஸ்தானில் ஒரு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமான உமர் ஷா என்ற 15 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
புன்னகைக்கும் முகம், அனைவரையும் கவரும் தோற்றம் எனப் புகழ்பெற்ற உமர், திங்கட்கிழமை அதிகாலை தனது சொந்த ஊரான டேரா இஸ்மாயில் கானில் உயிரிழந்தார். குடும்பத்தினர் மற்றும் மருத்துவ அறிக்கைகளின்படி, உமருக்கு வாந்தி ஏற்பட்டதாகவும், அதனால் நுரையீரலில் திரவம் சென்று, மாரடைப்பைத் தூண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அவரது வீட்டில் ஒரு விஷப்பாம்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே மரணம், மாரடைப்பால் வந்ததா அல்லது பாம்பினால் வந்ததா என்ற குழப்பமும் நிலவுகிறது.

உமரின் மூத்த சகோதரரான அகமது ஷா இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், எங்கள் குடும்பத்தின் சிறிய நட்சத்திரம் உமர் ஷா, அல்லாஹ்விடம் திரும்பிவிட்டார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரைப் பற்றியும் எங்கள் குடும்பத்தைப் பற்றியும் உங்கள் பிரார்த்தனைகளில் நினைவில் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இது அந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட இரண்டாவது சோகம். கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில்தான், இவர்களின் இளைய சகோதரியான ஆயிஷாவையும் இழந்திருந்தனர்.
உமர், தனது மூத்த சகோதரருடன் இணைந்து சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்து வந்தவர். ஜீட்டோ பாகிஸ்தான் மற்றும் ஷான்-இ-ரமழான் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளில் இருவரும் தோன்றினர். பல்வேறு உடைகளில், பீச்சே டூ தேக்கோ (peeche tou dekho) என்ற நகைச்சுவைப் பதிவுகளால் அவர்கள் ரசிகர்களின் விருப்பமானவர்களாக மாறினர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}