இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் சிசிடிவி கேமரா பொருத்திய தந்தையின் செயல் கலகலப்பையும் அதேசமயம், பெண்களின் நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்ற கவலையுயம் ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த ஹில் என்ற இளம் பெண் தனது எக்ஸ் தள பக்கத்தில் தலையில் சிசிடிவி கேமரா பொருத்தி கொண்டு வலம் வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியான இந்த வீடியோவை பார்த்த பத்திரிகை நிருபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அந்தப் பெண் பாதுகாப்பு கருதியும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் தனது தந்தை தலையில் சிசிடிவி கேமராவை பொருத்தியதாக பதில் அளித்துள்ளார். அதேபோல் தந்தையின் இந்த செயலால் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இன்றி காணப்படுகிறது. இதனால் பல்வேறு பாலியல் பலாத்கார குற்றங்களும் கொலைகளும் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் கராச்சியில் நடந்த பாலியல் தாக்குதலில் இளம்பெண் ஒருவர் பலியானார். இதனால் பெண்பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர். மேலும் பெற்றோர்கள் பெண்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில்தான் இந்த தந்தை தனது மகளின் பாதுகாப்புக் கருதி மகள் தலையிலேயே சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். இது பலரையும் சிரிக்க வைத்துள்ளது. அதேசமயம், கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. வெளியே சென்ற மகளை 24 மணி நேரமும் கண்காணிக்க இதுபோன்ற சிசிடிவி கேமராக்களை தலையில் பொருத்தியதற்கு பலரும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இந்த தந்தையை விமர்சிப்பது சரியாக இருக்காது. அதற்குப் பதில், பெண்களுக்கு இந்த நிலை ஏற்படக் காரணமானவர்கள்தான் உண்மையில் வெட்கப்பட வேண்டியவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}