வர்த்தக தடையை மீறி.. எமிரேட்ஸ் வழியாக.. இந்தியாவுக்கு பொருட்களை அனுப்பும் பாகிஸ்தான்!

May 17, 2025,05:12 PM IST

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தான் தனது வர்த்தகப் பொருட்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறதா என்பதை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது. 


பாகிஸ்தானில் இருந்து வரும் பேரீச்சம்பழங்கள் UAE வழியாக இந்தியாவுக்குள் வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இது இந்தியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வர்த்தக ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பொருட்களை தடுக்க, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் லேபிள்களையும், அவை எங்கிருந்து வருகின்றன என்பதையும் இந்தியா தீவிரமாக ஆய்வு செய்கிறது. 




UAE போன்ற நாடுகளிலிருந்து வரும் பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவையா என்பதை அதிகாரிகள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், எமிரேட்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வரும் பொருட்கள் பாகிஸ்தான் பொருட்களா என பரிசோதிக்கப்படுகிறது. ஒரு நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை கண்டுபிடிப்பது எளிது. ஆனால், வேறு இடங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை கண்டுபிடிப்பது கடினம். அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  தற்போது அனுப்பப்பட்டு கொண்டிருக்கும் பொருட்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.


ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை FY25ல் இந்தியா பாகிஸ்தானிலிருந்து $2.88 மில்லியன் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. அதில் தாவரங்கள், விதைகள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் மால்ட் சாறுகள் முக்கியமானவை. 2019ல் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானிலிருந்து வரும் பொருட்களுக்கு இந்தியா 200% வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் குறைந்தது. இந்தியா 1996ல் பாகிஸ்தானுக்கு "Most Favoured Nation (MFN)" என்ற அந்தஸ்தை வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 


ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக மே 2 அன்று பாகிஸ்தானிலிருந்து வரும் அனைத்து பொருட்களுக்கும் இந்தியா தடை விதித்தது. மூன்றாம் நாடுகள் வழியாக வரும் பொருட்களுக்கும் இந்த தடை பொருந்தும். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் இந்தியாவோடு செய்து வந்த அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது. மூன்றாம் நாடுகள் வழியாக நடந்த வர்த்தகமும் நிறுத்தப்பட்டது. இந்த தடைக்கு பிறகு, பாகிஸ்தான் மூன்றாம் நாடுகள் வழியாக பொருட்களை இந்தியாவுக்குள் அனுப்ப முயற்சிப்பதாக செய்திகள்  கூறுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

news

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்

news

Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

news

ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

news

தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு

news

வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!

news

வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!

news

சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்