இஸ்லாமாபாத் : நிலத்தில் இருந்து நிலத்திற்கு பாய்ந்து, 450 கி.மீ., தொலைவில் இருக்கும் இலக்குகளை தாக்கி, அழிக்கும் திறன் கொண்ட புதிய ஏவுகணையை பாகிஸ்தான் தற்போது வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் ஒரு ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. இது இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. Abdali Weapon System என்ற ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது. இது 450 கி.மீ தூரம் வரைக்கும் பாயும் திறன் கொண்டது. Exercise INDUS பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடந்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் சொல்லப்படுகிறது. Pahalgam தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது உலக நாடுகளின் கவனத்தை பாகிஸ்தான் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனை, ராணுவ வீரர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை பார்ப்பதற்கு தான் என சொல்லப்படுகிறது. ஏவுகணையின் முக்கியமான டெக்னிக்கல் விஷயங்களை சரிபார்ப்பதற்கு இது உதவி செய்யும். குறிப்பாக, ஏவுகணையின் நேவிகேஷன் சிஸ்டம் (navigation system) மற்றும் அதன் வேகத்தை மாற்றி அமைக்கும் திறனை சோதிக்கிறது தான் முக்கிய நோக்கம் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் ஷெபாஸ் ஷரீப் மற்றும் ராணுவ அதிகாரிகள், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவம் தயாராக இருக்கு என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். "எங்களுடைய ராணுவ வீரர்கள் திறமையாக உள்ளார்கள். அவர்கள் நாட்டை காப்பாற்றுவார்கள் என நான் நம்புறேன்" என்று ஷெபாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தான் போருக்கு தயார் என்பதை மறைமுகமாக அவர் கூறுவதாக சொல்லப்படுகிறது.
Line of Control (LoC) பகுதியில் அடிக்கடி சண்டை இடுவது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சினை இவை அனைத்தும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் டென்ஷனை அதிகப்படுத்தி உள்ளது. ஏப்ரல் 22-ல் நடந்த Pahalgam தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராக நிறைய வெறுப்பு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனால் ரெண்டு நாட்டுக்கும் இடையிலான போர் வரும் அபாயம் உருவாகி உள்ளது. எல்லையில் பதற்றமும் அதிகரித்துள்ளது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!
மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்
தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்
அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு
'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்
தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?
கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்
{{comments.comment}}