கராச்சி: பாகிஸ்தானில், ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
13 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள், உள்ளூர் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட 29 பேர் காயமடைந்ததாகவும் AFP செய்தி நிறுவன செய்தி தெரிவிக்கிறது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் உள்ளூர் அரசு அதிகாரி, பெயர் குறிப்பிட விரும்பாமல் கூறியதாவது: ஒரு தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை ராணுவ அணிவகுப்பின் மீது மோதினான். இந்த குண்டுவெடிப்பில் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர்; 10 ராணுவ வீரர்களும் 19 பொதுமக்களும் காயமடைந்தனர் என்றார் அவர்.

காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த தற்கொலைப்படைத் தாக்குதலால், இரண்டு வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்து ஆறு குழந்தைகள் காயமடைந்தனர். காயமடைந்த நான்கு வீரர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றார் அவர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபானின் ஒரு பிரிவான ஹபீஸ் குல் பகதூர் ஆயுதக் குழுவின் தற்கொலைப்படைப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்த அனுமதிப்பதாக இஸ்லாமாபாத் தனது மேற்கு அண்டை நாடான ஆப்கானிஸ்தானைக் குற்றம் சாட்டுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை தலிபான்கள் மறுக்கின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய இரு மாகாணங்களிலும் அரசுக்கு எதிராகப் போராடும் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களில் சுமார் 290 பேர், பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர், கொல்லப்பட்டுள்ளனர்.
அமித்ஷா தமிழகம் வந்தது இதுக்கு தானா.. நயினார் சொன்னதை யாராவது கவனிச்சீங்களா?
திமுக அரசு மீது ஊழல் புகார்: கவர்னரிடம் மனு அளித்த எடப்பாடி பழனிச்சாமி
ஜனவரி 6... தமிழகத்தில், 'வேட்டி நாள்' கொண்டாடுவது ஏன் தெரியுமா?
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கோரி அவசர வழக்கு
"Nature's Resplendence: An Ode to the Sublime"
நெஞ்சமெல்லாம் நீயே (சிறுகதை)
கண்ணாடியில்.. தூசி நிறைய இருக்கா.. அதை இப்படித் தொடச்சா.. எப்படி மாறும் தெரியுமா!
அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் தங்கம் வெள்ளி விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
ஜனநாயகன், பாரசக்தி.. இரண்டும் வெல்வதே தமிழ் சினிமாவுக்கு நல்லது!
{{comments.comment}}