சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த தாக்குதலை பயங்கரவாத சம்பவமாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானை பூர்வீமாககக் கொண்ட தந்தை - மகன் என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
சிட்னியின் பிரபலமான போண்டி கடற்கரையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிட்னியின் பிரபலமான போண்டி கடற்கரை பொதுவாக கொண்டாட்டமும் கலகலப்பும் நிறைந்த ஒரு இடம். ஆனால் இது நேற்று சோகக் களமாக மாறிப் போனது.
சூரியன் மறையும் அந்த அழகிய மாலைப் பொழுதில், அங்கே கூடியிருந்த யூத சமுதாயத்தினர் பாரம்பரிய ஹனுக்கா பண்டிகையின் தொடக்கத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். கடற்கரை மணலிலும் பூங்காவிலும் சிரிப்பொலிகளும் மகிழ்ச்சியான குரல்களும் நிறைந்திருந்தன.

ஆனால், திடீரென்று அந்த அமைதி குலைந்தது. கருப்பு நிற ஆடை அணிந்த இரண்டு பேர், கையில் துப்பாக்கிகளுடன் தோன்றினர். கண்ணில் பட்டவர்களை இருவரும் சரமாரியாகச் சுடத் தொடங்கவே, அந்தப் பகுதி போர்க்களம் போல மாறியது. கடற்கரையில் நீச்சலுடையில் இருந்தவர்கள், தங்கள் குழந்தைகளுடன் விளையாடியவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் அலறிக் கொண்டு ஓடினர். சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் இந்த கோரத் தாக்குதல் நீடித்தது.
இந்த கொடீரமான தாக்குதலில் 10 வயது சிறுமி முதல் 87 வயது முதியவர் வரை குறைந்தது 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 42-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலீஸார் விரைந்து வந்து செயல்பட்டனர். துப்பாக்கிதாரிகளில் ஒருவரான, 50 வயதான சஜித் அக்ரம் என்பவரை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். அவரது 24 வயது மகன் நவீத் அக்ரம் காயங்களுடன் உயிருடன் பிடிபட்டார்.
கடும் துப்பாக்கிக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஆஸ்திரேலியாவில், கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த மிக மோசமான துயரச் சம்பவம் இதுவாகும். பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்தத் தாக்குதலை பயங்கரவாதச் செயல் என்று வேதனையுடன் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட தந்தையும், மகனும் ஏன் இப்படிச் செய்தார்கள், அதன் பின்னணி என்ன.. ஏதேனும் அமைப்புக்காக இதைச் செய்தார்களா, தனிப்பட்ட காரணம் ஏதேனும் உள்ளதா என்பது தெரியவில்லை. விசாரணைக்குப் பின்னரே இது தெரிய வரும்.
மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!
என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?
உன்னால் முடியாதது ஏதுமில்லை பெண்ணே!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ஆஸ்திரேலியாவை அதிர வைத்த பாகிஸ்தானி அப்பா மகன்.. 16 பேரின் உயிரைப் பறித்த கொடுமை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 15, 2025... இன்று உதவிகள் தேடி வரும்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
{{comments.comment}}