- சகோ. வினோத்குமார்
புளோரிடா: உக்ரைன் ரஷ்யா இடையே நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதைப் பற்றி அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ மற்றும் உக்ரைன் அதிகாரிகள் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் ஓர் முடிவுக்கு வர கொஞ்சம் காலதாமதம் ஆகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே நடந்த வரும் இந்த போர் 2014 ஆம் ஆண்டிலேயே இதற்கான விதை விதைக்கப்பட்டுவிட்டது. உக்ரைனில் உள்நாட்டில் ஏற்பட்ட புரட்சியை பயன்படுத்தி ரஷ்யா கிரிமியா பகுதியினை கைப்பற்றியது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணையும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு ரஷ்யாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியினை அளித்தது. இதைத் தொடர்ந்து ரஷ்யா தனது பாதுகாப்பு கருதி உக்ரைனை நேட்டோவில் சேரக் கூடாது என தொடர்ந்து எச்சரித்து வந்தது.
இருப்பினும் உக்ரைன் அதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்தது. இதனால் கோபமடைந்த ரஷ்யா அதிபர் புதின் உக்கரைன் மீது 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தார்.

2022 இல் அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடன் உக்ரைனுக்கு நேரடியாக உதவாமல் போருக்கு தேவையான ஆயுதங்களை கொடுத்து மறைமுகமாக உதவி வந்தது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய வாக்குறுதிகளில் நான் அதிபரனால் உக்ரைன் ரஷ்ய போரை நிறுத்துவேன் என்று உறுதி கூறியிருந்தார். அதற்கான தொடரும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கடந்த மாதம் டிரம்ப் புதின் உடன் பேச்சுவார்த்தை நடத்தி 28 அம்ச திட்டம் ஒன்றை கொண்டு வந்தார். ஆனால் இந்த திட்டம் ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் எதிர்த்து வந்தது.
இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் புளோரிடாவில் அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும் உக்ரைன் ரஷ்ய போர் நிறுத்தம் ஏற்பட காலதாமதம் ஆகும் என கூறியுள்ளார். இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே ஆன போர் இரண்டு நாடுகளை மட்டும் அல்லாமல் உலகில் பல்வேறு நாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்து வந்தன. அதனால் இந்த பேச்சுவார்த்தையை உற்று கவனித்து வந்த உலக நாடுகள் உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் விரைவில் சமரசம் ஏற்படும் என்று கருதி வந்தனர். ஆனால் நேற்றைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை சிறிது அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.
(சகோ. வினோத்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!
தினத்தந்தி நிர்வாக ஆசிரியர் டி.வி.ஆர்.சுகுமாருக்கு.. கலைஞர் எழுதுகோல் விருது
பெங்களூருவில் தமிழ் புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா?.. சூப்பர் சான்ஸ் வந்திருக்கு பாஸ்!
உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதாய்யா.. லேட்டாகுமாம்.. அமெரிக்கா அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை லீவு?.. என்ன காரணம் தெரியுமா.. வாங்க இதைப் படியுங்க!
மதகு சரி செய்யாததால் குழந்தை உயிரிழப்பு... திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.. என்ன காரணம் தெரியுமா?
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழு விபரம்!
ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?
{{comments.comment}}