- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
அப்புசாமி பல் வலி தாங்க முடியாமல் பல் மருத்துவரைப் பார்க்கச் சென்றார்.
"டாக்டர், என் வலது பக்கப் பல் ரொம்ப வலிக்குது. அதை எடுத்துவிடுங்கள்!" என்றார்.
மருத்துவர்: "கண்டிப்பாக. கொஞ்சம் வாயை திறங்கள்."
அப்புசாமி வாய் திறக்க, மருத்துவர்: "ஐயோ! உங்களது இடது பக்கப் பல் ரொம்ப மோசமாக இருக்கே, பயங்கரமா ஆடுதே. இதையும் எடுத்து விடலாமா?" என்று கேட்டார்.
அப்புசாமி அவசரமாக: "வேண்டாம் டாக்டர்! வலது பக்கப் பல்லை மட்டும் எடுங்கள்."என்றார்.

சிகிச்சை முடிந்ததும், மருத்துவர் சிரித்துக்கொண்டே: "இவ்வளவு ஆடுகிற நிலையில் இருந்த இடது பக்கப் பல்லை ஏன் எடுக்க வேண்டாம் என்று சொன்னீர்கள்? சாப்பிடும் போது பல்லையும் சேர்த்து முழுங்கி விட வாய்ப்புக்கள் அதிகம்" என்று கேட்டார்.
அப்புசாமி கண் சிமிட்டியபடி: "அதுதான் என் மனைவியின் பிரியமான பற்கள் டாக்டர். அவளே எடுத்து விடுவாள். எதற்கு இதற்குப் போய் உங்களுக்கு ஃபீஸ் கொடுத்துக்கொண்டு..? என்றார்.
உங்க மனைவி பல் டாக்டரா..?
இல்ல டாக்டர். அவளின் அன்பான கை... டாக்டர்.
என்ன கை டாக்டரா ..? எனக்கு புரியலையே..?
ஒவ்வொரு முறையும் என்னுடன் சண்டை போடும் போது, அவள் என் இடது பக்கக் கன்னத்தில் தான், தன் கையால் ஓங்கி குத்துவாள் . அந்தப் பல் அவள் குத்தும் போது தானாகவே விழுந்து விடும். அப்போ வெளியே துப்பி விடுவேன்.
மருத்துவர் அதிர்ந்து போனார்.. பின்னர் சிரித்துக் கொண்டே " அடுத்த சண்டை எப்போது என்றார்.
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
விஜய்யிடம்.. காலை 11 மணி முதல் 4 மணி வரை.. சிபிஐ விசாரணை.. நாளை விசாரணை இல்லை என தகவல்
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!
தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை
புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்
பாஜகவால் மட்டுமே கேரளாவில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி
2026 பொங்கல் எப்போது? ஜனவரி 14-ஆ அல்லது 15-ஆ? - ஒரு தெளிவான விளக்கம்
தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்
{{comments.comment}}