குடியரசு தின விழாவில் அசத்திய பண்ணைவிளாகம் பள்ளி மாணவர்கள்!

Jan 28, 2026,04:49 PM IST

- அ. வென்சி ராஜ்


திருவாரூர்: குடியரசு தின விழாவின்போது நடந்த கலை நிகழ்ச்சிகளில், திருவாரூர் மாவட்டம் பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அசத்தி விட்டனர்.


நாட்டின் 77-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு பள்ளிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், கொரடாச்சேரி ஒன்றியம், பண்ணைவிளாகம் புனித ஜெயராக்கிணி மாதா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய கலைப்பயணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


கலைகளின் சங்கமம்: 90 மாணவர்களின் அற்புதம்




இந்தப் பள்ளியைச் சேர்ந்த 90 மாணவச் செல்வங்கள் ஒன்றிணைந்து வழங்கிய கலை நிகழ்ச்சி, வெறும் நடனமாக மட்டும் இல்லாமல், தமிழக அரசின் சாதனை விளக்கப் படமாகவும் அமைந்தது. 


தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான, தப்பாட்டம் & ஒயிலாட்டம், கும்மியாட்டம் & கோலாட்டம், கரகாட்டம் & நாட்டுப்புற நடனம் எனப் பல்வேறு கலை வடிவங்களை ஒருங்கிணைத்து மிக நேர்த்தியாக ஆடினர். இவர்களின் இந்தத் திறமையான வெளிப்பாட்டிற்கு விழாவில் இரண்டாம் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


நடனத்தில் மிளிர்ந்த தமிழக அரசின் நலத்திட்டங்கள்


மாணவர்கள் தங்களின் நடன அசைவுகளின் ஊடே, தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகளிருக்கான திட்டங்களையும், மாணவர்களுக்கான கல்வித் திட்டங்களையும் மிக அழகாகக் காட்சிப்படுத்தினர்.


தமிழக அரசு அமல்படுத்தி வரும் மகளிர் நலத்திட்டங்களான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம் (இலவசப் பேருந்துப் பயணம்), பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மற்றும் 'வெல்லும் தமிழ் பெண்கள்' போன்ற திட்டங்கள் நடனத்தின் வாயிலாகப் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.


கல்வி நலத்திட்டங்களான மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அரசு வழங்கி வரும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் & தமிழ் புதல்வன் திட்டங்கள், எண்ணும் எழுத்தும் & இல்லம் தேடிக் கல்வி, வானவில் மன்றம், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் சர்வதேச கல்விச் சுற்றுலா, தற்காப்பு கலைப் பயிற்சி மற்றும் கலைத்திருவிழா போன்ற எண்ணற்ற திட்டங்களை மாணவர்கள் பெருமையுடன் மேடையில் பறைசாற்றினர்.


கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்து, மாவட்ட அளவிலான முக்கிய விழாவில் தங்களின் திறமையை நிரூபித்து, இரண்டாம் பரிசு வென்றுள்ள பண்ணைவிளாகம் புனித ஜெயராக்கிணி மாதா பள்ளி மாணவர்களையும், அவர்களுக்குப் பயிற்சியளித்த ஆசிரியர்களையும் மாவட்ட நிர்வாகமும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்