என்னது.. பரினிதி சோப்ராவும் அரசியலுக்கு வர போகிறாரா?

Apr 02, 2023,09:32 AM IST
மும்பை : பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருக்கும் பரினிதி சோப்ரா, விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும், திருமணத்திற்கு பிறகு அரசியலில் சேர போவதாகவும் பிரபல பாடகர் ஹார்தி சாந்து தெரிவித்துள்ளது ரசிகர்களை ஆச்சரியம் கலந்த, அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையான பரினிதி சோப்ராவும் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் நடித்து பல விருதுகளை வென்ற பரினிதி சோப்ரா தற்போது சாம்கிலா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக கேப்சூல் கில் என்ற படத்தில் நடித்து வருகிறார். 




பரினிதியும் ஆம் ஆத்மி பிரமுகரான ராகுல் சதாவும் டேட்டிங் செய்து வருவதாக பல நாட்களாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஜோடி இது பற்றி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இது உண்மை தான் என்பது போல, மார்ச் 28 ம் தேதி டில்லி ஏர்போர்ட்டிற்கு வந்த பரினிதியை, ராகுல் தனது காரில் ஏற்றிச் சென்றார். இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பிரபல பாடகர் ஹார்தி சாந்து தனது ட்விட்டர் பக்கத்தில், பரினிதியும் ராகுல் சதாவும் காதலித்து வருகிறார்கள். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.  திருமணத்திற்கு பிறகு பரினிதி, நடிப்பில் இருந்து விலக உள்ளார். அதோடு அரசியலிலும் இணைய உள்ளார். அவரது திருமண மற்றும் அரசியல் வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதனால் பரினிதி சோப்ராவிற்கு ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் எப்போது, எங்கு திருமணம் நடைபெற உள்ளது என பரினிதி - ராகுல் ஜோதி இது வரை உறுதி செய்யவில்லை. இருந்தாலும் பரினிதி நடிப்பிற்கு குட்பை சொல்ல உள்ளதாக பாடகர் ஹார்தி சொல்லி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைய வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

TVK Cabinet: தவெக அமைச்சரவையில்.. எத்தனை அமைச்சர்கள்.. யார் யாருக்கு எந்தத் துறை?

news

CM Vijay Swearing in: முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்.. அமைச்சர்களும் பதவியேற்பார்கள்

news

கிடைத்தது பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் நீங்கியது.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்

news

DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!

news

மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!

news

தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!

news

தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்