பாரீஸ்: பாரீஸில் நடந்த பாராலிம்பிக்ஸ் போட்டி இந்தியர்களுக்கு மறக்க முடியாத அற்புதமான போட்டித் தொடராக மாறி விட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களைக் குவித்து அசத்தி விட்டது இந்தியா.
பாரீஸிலில் இன்றுடன் இந்தியாவின் பாராலிம்பிக்ஸ் பதக்க வேட்டை முடிவுக்கு வந்தது. இந்தியா இந்த போட்டித் தொடரில் 7 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களைப் பெற்று அசத்தி விட்டது. இதுதான் பாராலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே இந்தியா பெற்ற அதிகபட்ச ஒட்டுமொத்த பதக்கங்கள் என்பது புதிய சாதனையாகும்.
பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 18வது இடம் கிடைத்தது. நமது பக்கத்து நாடான பாகிஸ்தான் அணி ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 79வது இடத்தைப் பிடித்தது.
2024 பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா மிகச் சிறப்பான திறனை வெளிப்படுத்தியது. பெரிய பெரிய அணிகளுக்கெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் அளித்து அசத்தி விட்டது. உலகின் தலை சிறந்த 20 அணிகளில் ஒன்றாக இந்தியாவும் இந்தத் தொடரில் உருவெடுத்தது இந்தியர்களுக்கு மிகப் பெரிய பெருமையாகும்.
பாரீஸில் காட்டிய இந்தத் திறமையால் அடுத்து 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸில் நடைபெறவுள்ள பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இன்னும் பெரிய முன்னேற்றத்தைக் காட்டும், அதிக பதக்கங்களை வெல்லும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
56 ஆண்டு கால பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா ஒரு தொடரில் அதிக அளவில் பதக்கங்களை அள்ளுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு கடந்த முறை நடந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா 5 தங்கப் பதக்கங்கள் வென்றிருந்தது. இந்த முறை கூடுதலாக 2 பதக்கங்களை வென்று அசத்தி விட்டது.
பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் இன்றுடன் முடிவடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர்கள்:
தங்கப் பதக்கம்: அவனி லக்கேரா, குமார் நிதேஷ், சுமித் அன்டில், ஹர்வீந்தர் சிங், தரம்பீர் நைன், நவதீப் சிங் பிரவீன் குமார்.
வெள்ளிப் பதக்கம்: மனீஷ் நர்வால், நிஷாத் குமார், யோகேஷ் கதுனியா, துளசிமதி முருகேசன், சுஹாஸ் யதிராஜ், அஜீத் சிங் யாதவ், சரத்குமார், சச்சின் கிளாரி, பிரணவ் சூர்மா.
வெண்கலப் பதக்கம்: மோனா அகர்வால், பிரீத்தி பால் (2), ரூபினா பிரான்சிஸ், மனீஷ் ராமதாஸ், ஷீத்தல் தேவி/ராகேஷ் குமார், நித்யா சிவன், தீப்தி ஜீவன்ஜி, மாரியப்பன் தங்கவேலு, சுந்தர் சிங் குர்ஜார், கபில் பார்மர், ஹோக்கேடோ ஹோட்டோஷோ சேமா, சிம்ரன் சர்மா.
மகாவிஷ்ணுக்கள் பாடம் கற்கட்டும்:
இப்படி வரலாறு படைத்து, இந்தியாவின் பெயரை உயர்த்திப் பிடித்து, ஒலிம்பிக் போட்டியில் கூட நம்மால் சாதிக்க முடியாததை அட்டகாசமாக சாதித்து புதிய சாதனை படைத்த இந்த மாற்றுத் திறனாளிகள் மிக மிக உயர்ந்தவர்கள்.. இப்படிப்பட்டவர்களைப் போய் பாவம் செய்தவர்கள், கர்மா, போன பிறவியில் தப்பு செய்தவர்கள் என்று ஒருவர் ஜஸ்ட் லைக் தட் பேசி விட்டுச் சென்றதுதான் பெரும் வேதனையாக இருக்கிறது.
இப்படிப்பட்ட பெருமைக்குரிய வீரர்கள், வீராங்கனைகளிடம் மகாவிஷ்ணு போன்ற மடமைவாதிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!
எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!
Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!
தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?
"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!
சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!
{{comments.comment}}