சென்னை: ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? என பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தொடர்ந்து எட்டு நாட்களாக பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடி வரும் நிலையில் அவர்களின் கோரிக்கைகளை அறிவாலையம் அரசு கண்டுகொள்ளாது அலட்சியம் காட்டுவதோடு கைது செய்து வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் 181 கீழ் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோருவது தவறா? தேர்தல் நேரத்தில் மட்டும் நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், பின் ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் அதிகாரிகளைப் பேச விட்டு அலட்சியத்துடன் அமர்ந்திருப்பதும் நியாயமா? தங்கள் உரிமைக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆசிரியர்கள் போராடட்டும் என அலைக்கழிப்பதால் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனும் பாதிக்கப்படும் எனும் அடிப்படை உண்மையைக்கூட உணர இயலாதா?
ஆசிரியர்களை வதைத்தது போதாதென்று, ஆசிரியர்கள் போராட்டத்தை ஒளிப்பதிவு செய்த செய்தியாளர்களையும் காவலர்கள் தள்ளி விட்டிருப்பது திமுக அரசின் அராஜகத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?
'நாடு போற்றும் நல்லாட்சி' என்று விளம்பரம் செய்வதை விட்டுவிட்டு உடனடியாக பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் காக்கும் பொருட்டு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை தமிழக பாஜக போராட்டக் களத்தில் துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நயினார் நகேந்திரன் கூறியுள்ளார்.
கருப்புக் கொடி காட்டிய.. பாஜக இளைஞர் அணியினரை அருகே அழைத்து.. மிட்டாய் கொடுத்த ராகுல் காந்தி
காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை: மரங்கள் மாநாட்டில் தவெகவை தாக்கி பேசிய சீமான்
சஞ்சு சாம்சன் போவாருன்னு பார்த்தா.. ராகுல் டிராவிட் ராஜிநாமா.. என்ன நடக்குது?
அண்ணாமலை மற்றும் தவெக குறித்து விமர்சிக்க வேண்டாம்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே... சொன்னீங்களே செஞ்சீங்களா ?: நயினார் நாகேந்திரன் கேள்வி!
ஒரே மேடையில் அண்ணாமலை- இபிஎஸ்: எனது சகோதரர் அண்ணாமலை-இபிஎஸ்!
என்ன நடக்கிறது... கூட்டணி மாறுகிறதா?... தேஜ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்!
இந்தியப் பொருளாதாரம் 6.8% வரை உயரும்.. பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் இடியை இறக்கிய வாஷிங்டன் கோர்ட்.. வரி விதிப்பு செல்லாது!
{{comments.comment}}