இந்திய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளுக்கு.. கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

Apr 14, 2025,01:37 PM IST

சென்னை: அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் 

மு.க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதேபோல் பல்வேறு கட்சித்  தலைவர்களும் அண்ணல் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தி வருகின்றனர்.


1891 ஆம் ஆண்டு பிறந்த அம்பேத்கர், இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பி மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், ஒரு சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் செயல்பட்டவர். இதனால் இவரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவ்வாறு பெருமை வாய்ந்த பீமா ராவ் அண்ணல் அம்பேத்கரின் உயரிய கோட்பாடுகளை கௌரவிக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாள் பீம் ஜெயந்தி எனவும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்தால் நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அண்ணல் அம்பேத்கரின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து  கௌரவித்து வருகின்றனர்.


அந்த வகையில் 2022 ஆம் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என மாண்புமிகு முதல்வர்

மு.க ஸ்டாலின் 

அறிவித்தார். அதன்படி





அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற உள்ள சமத்துவ நாள் விழாவில் முதல்வர் 

மு. க ஸ்டாலின் கலந்து கொண்டு 332 கோடி மதிப்பீட்டில், 49,542 பயனாளிகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை  வழங்க உள்ளார். இதில் ஒரு பகுதியாக ஆதி திராவிட பழங்குடியினர் பல்கலைக்கழக விடுதியினை திறந்து வைக்கிறார்.இதனை தொடர்ந்து 

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த இருக்கிறார். அப்போது முதல்வர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது. இதனை அடுத்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ள சமத்துவ நாள் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார். 



இந்த நிலையில் அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர். இது குறித்து வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில்,

முதல்வர் மு.க ஸ்டாலின்:


சாதி எனும் ஆயிரமாண்டு அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் - தனக்குவமை இல்லாத புத்துலகப் புத்தர் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள்... சமத்துவ நாள்!


ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நம் பயணத்தில் என்றும் நம்மை வழிநடத்தும் அறிவுலகச் சூரியன் அம்பேத்கர் வாழ்க!


‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கிய நமது திராவிட மாடல் பயணத்தில், பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியா கண்டே தீருவோம்! ஜெய் பீம்!



துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்:


ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு கல்வி - ஒற்றுமை - போராட்டமுமே நிரந்தவழி என முழங்கியவர்.


அறிவுச் சாட்டையைச் சுழற்றி பேதங்களின் எலும்புகளை நொறுக்கிய மாமேதை.


இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று!


இந்நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தவர் நம் முதலமைச்சர் முக ஸ்டாலின் 

அவர்கள்.


கல்வியை குலைத்து, மாணவர்கள் மத்தியில் பிற்போக்குத்தனத்தை நிலைநிறுத்தும் கனவுலகில் மிதந்தவர்களுக்கு அண்ணல் இயற்றிய சட்டத்தின் வழியில் பல்கலைக்கழகங்களை காத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.


அண்ணலின் கருத்துகள் கற்றறிவதற்கு மட்டுமல்ல, காலச் சூழலுக்கு ஏற்ப களத்தில் செயல்படுத்தி வெற்றியடைவதும் முக்கியம்.


ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைப்பதே நமது இறுதி இலக்கு. அதற்கு அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம்.


டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்:


ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு உயர தன் வாழ்க்கையை அர்பணித்து நம் ஜனநாயகத்திற்கு பெருமை சேர்க்கும் அரசியலமைப்பு சட்டம் உருவாக காரணமாக இருந்த 

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தில் அவர்தம் நினைவை போற்றி வணங்குகிறேன்...



மநீம தலைவர் கமலஹாசன்:


மானுட சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்பதைச் சிந்தனை விதையாய்த் தூவியவர்; அத்துடன் நின்றுவிடாமல், அந்த சமநிலையின்மையைச் சந்தித்து எதிர்கொள்ளும் வழிவகைகளையும் சொன்னவர்; சொன்னவற்றைச் சட்டப்பூர்வமாக ஆக்கியும் தந்த பெருமகன் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர். அவரது பிறந்த நாள் இன்று. 


சமநீதிக்குச் சவால் விடும் கூட்டம்  முன்னெப்போதையும்விட வலுவடைந்து வருகிறது.  வெறுப்புக்கும், பாகுபாட்டுக்கும் எதிராக நாம் எழ வேண்டிய காலமாக இது உள்ளது. இத்தருணத்தில் நமக்கான ஆயுதங்களையும் கேடயங்களையும் ஆக்கித்தந்த அண்ணலின் சொற்களை நெஞ்சில் ஏந்திக்கொள்ள சூளுரை எடுக்க வேண்டிய நாள் இது.



தவெக தலைவர் விஜய்:


சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்.


பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை:



சட்ட மேதை, பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினமான இன்று சமூக நீதி, சமத்துவம், ஏற்றத்தாழ்வு சமூகம் அமைக்கப் பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளையும், நோக்கங்களையும் முன்னெடுத்துச் செல்வோம். போலி சமூக நீதி பேசி, பல ஆண்டு காலம் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேடதாரிகளை அம்பலப்படுத்துவோம். அண்ணல் போற்றிய தேசியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க, இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மாலேகான் குண்டுவெடிப்பு.. பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்கூர் உட்பட 7 பேர் விடுதலை

news

முருகனுக்குக் கிடைக்காமல் போன ஞானப்பழத்தின் கதை தெரியுமா?

news

பாஜக மாநில அளவிலான பதவியில் குஷ்பு.. விஜயதாரணிக்கு இந்த முறையும் பதவி இல்லை!

news

மத்திய அரசுக்கு நேற்று.. மாநில அரசுக்கு இன்று.. கண்டனத்திலும் பேலன்ஸ் செய்யும் ஓ.பி.எஸ்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 31, 2025... இன்று இந்த ராசிகளுக்கு நல்ல செய்தி தேடி வரும்

news

3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?

news

வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!

news

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்