ஆட்சி முடியும் நேரத்தில் ஓட்டுக்களைப் பெற மகளிர் மசோதா.. காங்கிரஸ் தாக்கு!

Sep 22, 2023,03:27 PM IST

திண்டுக்கல்: பாஜக ஆட்சி முடியப் போகும் நேரத்தில் வாக்குகளை பெறும் நோக்கிலேயே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது பாஜக என்று கூறியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.


காங்கிரஸ் நகர நிர்வாகிகளின் பயிற்சி பாசறை கூட்டம்  திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து மோடி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளதாக பெருமைப்பட்டுக்கொள்கிறார். நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டாலும் தொகுதி வரையறை முடிந்த பிறகுதான் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இதன் மூலம் இந்தி பேசும் பீகார் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பாஜக சூழ்ச்சி செய்கிறது. மேலும் தனக்கு வாக்கு வங்கி குறைவாக உள்ள தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டம் வகுத்துள்ளது. 


தனக்கு சாதகமான மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பாஜக எடுத்து வரும் முயற்சியை இந்திய கூட்டணி கண்டிக்கிறது. மகளிர்க்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் காங்கிரஸுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. 


தற்போது பாஜக தனது ஆட்சி நிறைவு காலத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி அதன் மூலம் வாக்குகளை பெற முடியுமா என திட்டம் வகுத்துள்ளது. ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறு வரையறை செய்ய முடியாது அதனால்தான் 33 சதவீத இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.  வருகிற நாடாளுமன்றத் தேர்தலை அதிபர் தேர்தல் போல் நடத்த மோடி திட்டமிட்டு வருகிறார். 

காவேரி பிரச்சனையை பொருத்தவரையில் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளது. எல்லா காலகட்டங்களிலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை பங்கீடு செய்து வழங்க அறிவுறுத்தி உள்ளது. ஆனால் கர்நாடகா அரசு இதனை பின்பற்றவில்லை. காவேரி பிரச்சனையில் நாங்கள் தமிழக அரசின் நிலைப்பாட்டையே கொண்டுள்ளோம். ஆனால் பாஜக தமிழகத்தில் ஒரு நிலைப்பாட்டிலும் கர்நாடகாவில் வேறு ஒரு நிலைப்பாட்டிலும் உள்ளது என்றார் அழகிரி.

சமீபத்திய செய்திகள்

news

முதல் போட்டியிலேயே... ஹைதராபாத்தைப் புடைத்தெடுத்து.. வெற்றியைத் துடைத்து எடுத்த ஆர்சிபி

news

கொளத்தூர் மு.க.ஸ்டாலின்.. காட்பாடி துரைமுருகன் .. திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

news

பெரம்பூரில் திமுக போட்டி.. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிப்பு

news

PTR Palanivel Thiagarajan Vs Sundar C: மதுரையின் அடையாளத்துடன் மோதும் ஈரோட்டு சிங்கம்!

news

எல்பிஜியை விடுங்க.. சான்ஸ் இருந்தால் பிஎன்ஜிக்கு மாறிடுங்க.. பெஸ்ட்!

news

ஐபிஎல் 2026: சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. 2 வாரங்களுக்கு எம்.எஸ். தோனி விளையாட மாட்டார்!

news

Iran War: 850 ஏவுகணைகள் காலி.. அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு காலியாகிறதா?

news

Respect Your Cat Day: பூனைதானே.. அப்படின்னு நினைக்காதீங்க.. அவங்களையும் மதிக்கணும்!

news

அசைஞ்சு வரும் தேரு.. அது எங்கு ஆழித் தேர்.. தேரோட்டத்திற்குத் தயாராகும் திருவாரூர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்