Proverbs: பழமொழியும் உணவுப் பழக்கமும்.. தன் காயம் காக்க வெங்காயம் போதும்!

Jan 23, 2025,02:57 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பழமொழிகள் மக்களுக்கு பல்வேறு நல்ல விஷயங்களைச் சொல்ல ஆதி காலத்தில் பயன்படுத்தப்பட்டது. பழமொழிகள் மக்களுக்கு தேவையானதைச் சொல்லி வைத்துச் சென்றுள்ளனர் நம்முடைய முன்னோர்கள்.


தன் காயம் காக்க வெங்காயம் போதும்.. இன்று இந்தப் பழமொழியை பற்றி இங்கு பார்ப்போம், நம் உடல் நலத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கூறுவதே இப்பழமொழி.


உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது. ஆதலால் எந்த விபரமும் தெரியாத வரை எந்த ஒரு விஷயமும் தெரியாவிட்டால் அவர்களை வெங்காயம் என்று கேலியாக கூறுவர். ஆனால் வெங்காயம் மருத்துவ குணம் வாய்ந்தது. எந்தக் காயமும் படாமல் நம்மை அழ வைப்பது வெங்காயம். அத்தகைய சிறப்பு வாய்ந்தது வெங்காயம். 


அதாங்க உரிக்க உரிக்க தானாக கண்களில் நீர் வரும். அதற்கு காரணம் அதில் உள்ள வேதிப்பொருள் காற்றோடு கலப்பது தான் அது கண்களுக்கு எரிச்சலை தூண்டி கண்ணீர் வரவழைக்கிறது. வெங்காயத்தில் அதிக பயன்கள் உண்டு. அவை என்னவென்று பார்ப்போமா..!


இரும்புச்சத்து புரதச்சத்து வைட்டமின் ஏ பி சி சுண்ணாம்பு சத்து நிறைந்தது போலிக் அமிலம் பொட்டாசியம் பீட்டா கரோட்டின் போன்றவை உள்ளது. இவை இளமையாக இருக்க கண்பார்வை ரத்த விருத்தி போன்றவற்றை பாதுகாப்பதில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது.




சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம், வெள்ளை வெங்காயம் என்ற இன்னும் பல வகைகள் உண்டு. நம் அன்றாட சமையலறையில் இருக்க வேண்டியவை இவை. சைவ மற்றும் அசைவ உணவில் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம்.


சின்ன வெங்காயத்தில் அதிக ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. ஜலதோஷம் இருமல் சளி இருந்தால் வெங்காயச் சாறுடன் தேன் கலந்து கொடுப்பார்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடியது வெங்காயம். சின்ன வெங்காயத்தை தீயில் சுட்டு சிறிது மஞ்சள் நெய் கலந்து இளஞ்சூட்டோடு உடலில் ஏதாவது கட்டிகள் இருந்தால் அதன் மீது வைத்து கட்டுவார்கள்.


தலைவலி தீர்க்க தலைமுடி உதிராமல் இருக்க தேங்காய் எண்ணெயில் பெரிய வெங்காயத்தை அரைத்து காய்ச்சி பயன்படுத்துவர்.


பாம்பு தேள் கடிக்கு உடனடி மருந்தாகிறது வெங்காயம். உடல் எடை குறைக்க விரும்புவோர் நிறைய சிறிய வெங்காயம் சாப்பிடலாம்.  


பெரிய வெங்காயம் அசைவ உணவுகளில் பிரியாணி சிக்கன் கிரேவி மட்டன் கிரேவி அதிகம் பயன்படுத்தப்படுகிறது.


சின்ன வெங்காயம் சாம்பார் கீரை பொரியல் கீரை கடையல் கூட்டு காய்கறி பொரியல் ஆகிய அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது.


அம்மை நோய் வந்தவர்களுக்கு சிறிய வெங்காயத்தை மாலையாக கோர்த்து கழுத்தில் அணிவிப்பர். அது கிருமிகளை ஈர்க்கும் சக்தி அதிகம் உள்ளது.


இவ்வாறு நம் உடலில் உச்சி முதல் பாதம் வரை எல்லா காயத்திற்கும் உடல் உள்ளுறுப்புகளுக்கும் மருந்தாக விளங்குகிறது இந்த வெங்காயம். அதனால்தான் தன் காயம் காக்க வெங்காயம் போதும் என்ற பழமொழி வந்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!

news

தீபங்கள் ஏற்றும்.. திருக்கார்த்திகை மாதத்தில்.. துளசி பூஜை வெகு விசேஷம்!

news

SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்

news

சென்னை மாநகரில் குடிநீர் உபயோகத்தை கண்காணிக்க ஸ்மார்ட் மீட்டர்.. மாநகராட்சி திட்டம்

news

திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

news

குடிநீர் விநியோகம் சரியில்லை.. மேட்டுப்பாளையத்தில் குமுறலை வெளியிட்ட குடும்பங்கள்!

news

விவசாயிகளே.. உங்களுக்கு சில நற்செய்திகள்.. வாங்க வந்து படிங்க இதை!

news

தாலி இவ்ளோ அசிங்கமா காமிச்சது சரியில்ல: இயக்குனர் கே. பாக்கியராஜ்

news

சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்