கரிசல் காட்டு கடலை.. பச்சையாக..அச்சு வெல்லம் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டா.. ஆஹா.. என்னா சுகம்!

May 08, 2024,06:35 PM IST
- பொன் லட்சுமி

நட்ஸ்களின் இளவரசி.. ஏழைகளின் நட்ஸ்.. யார் தெரியுமா.. வேற யாரு.. நம்ம வேர்க்கடலைதான்.. இதை பிடிக்காதவர்கள் யாரேனும்  உண்டா.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும்  பொருள்.. இது பொதுவாக எண்ணெய் பயிர் என்று அழைக்கப்படுகிறது.. நிலத்திற்கு அடியில் இது விளைவதால்  இதற்கு நிலக்கடலை என்றும்  மற்றொரு பெயர் உண்டு. 

கடலை வெறும் ருசிக்காக மட்டும் சாப்பிடப்படுவது இல்லைங்க. இதுல பல்வேறு வகையான மருத்துவ குணங்களும் அடங்கி இருக்கு. காந்தியடிகளே இதை விரும்பி சாப்பிடுவார், அனைவரையும் சாப்பிடவும் சொல்வார்.. அட அப்படி என்னதான் இருக்குன்னு கேக்கறீங்களா.. வாங்கங்க.. சொல்றோம்.



பாதாமை விட ஒரு சிறந்த நட்ஸ் இந்த வேர்க்கடலை தான். இதில்  விட்டமின் பி 6, வைட்டமின்கள் , தயாமின் , போலட் போன்ற எண்ணற்ற  வகையான சத்துக்கள் அடங்கியுள்ளது.. இவ்வளவு சத்துக்கள் கொண்ட இந்த வேர்க்கடலையை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வரும்போது  உடலுக்கு தேவையான  பல சத்துக்கள் கிடைக்கிறது... இதை அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது  உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றி ரத்தத்தை சுத்தப்படுத்தி  ரத்த அளவை கட்டுக்குள் கொண்டு வரும்.. அது மட்டுமல்லாமல் இதில் உள்ள வைட்டமின் ஏ குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகிறது.

கர்ப்பிணிகள் தினம் ஒரு கைப்பிடி அளவு அவித்த வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு மிகவும் நல்லது  அதேபோல் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் இது மிகவும் நல்லது... இதில் உள்ள புரதம்,  பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.. குழந்தைகள் இந்த வேர்க்கடலையை அடிக்கடி சாப்பிடும் போது அவர்களின் ஞாபகத்திறன் அதிகரிக்கிறது. இது மூளை வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிகிறது.. மேலும் இதில் வருத்த வேர்க்கடலை விட அவித்த வேர்க்கடலை தான் 
அதிகளவு சத்துக்கள் அடங்கியுள்ளன...

நம்மில் பலருக்கு சர்க்கரை நோயாளிகள் இந்த வேர்க்கடலை சாப்பிடலாமா கூடாதா என்ற எண்ணம் இருக்கிறது.. சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடும் போது  இதில் உள்ள மெக்னீசியம்   இன்சுலின் சுரப்பை  அதிகப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். அதனால் தாராளமாக சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாம்.. ஆனாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்   என்பதற்கு ஏற்ப சிறிதளவு எடுத்து கொள்ள வேண்டும்... அதேபோல பித்த உடம்பு உள்ள  சிலருக்கு பச்சையாக இந்த கடலைகளை சாப்பிடும் போது உடம்புக்கு ஒவ்வாமை ஏற்படும். வயிற்று வலி வாந்தி மயக்கம் போன்றவை ஏற்படும் அதனால் அவர்கள்  குறைந்த அளவாக  அதுவும் அவித்து சாப்பிடலாம்.. அதேபோல கடலையை அதிக பச்சையாக சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். வறுத்த கடலை சாப்பிடுவது நல்ல.. அதேபோல, மூட்டு வலி  பிரச்சினை உள்ளவர்களும் கடலை சாப்பிடுவதை அளவோடு வைத்துக் கொள்வது அவசியம்.

சரி ஒரு குட்டிக் கதை உங்களுக்காக..



சிறு வயதில் எங்கள் கிராமத்தில் வேர்க்கடலை அதிகமாக  பயிரிடுவார்கள்.. குடும்பம் குடும்பமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  விடியற்காலை ஐந்து  மணிக்கெல்லாம்  கடலை பிடுங்குவதற்காக ஒரு நார் பெட்டியில்  காலையும் மதியமும் சாப்பாட்டிற்கு தேவையான சாப்பாடுகளை ஒரு தூக்குவாளியில் எடுத்து வைத்துக்கொண்டு வெளிச்சத்திற்கு முன்பே இருட்டில் கிளம்பி விடுவார்கள்... சூரிய உதயத்திற்கு முன்பே முக்கால்வாசி கடலை செடிகளை பிடுங்கி ஒரு குவியல் போல் குவித்து வைப்பார்கள்.. பின்பு காலை சாப்பாட்டை முடித்துக் கொண்டு மீண்டும் கடலை செடியை பிடுங்க ஆரம்பிப்பார்கள்.. மதியத்திற்குள் எல்லா செடிகளையும் பிடுங்கி முடித்ததும் மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு  அந்த  கடலை செடியில் இருந்து அனைத்து கடலைகளையும் பிரித்து எடுப்பார்கள்.

அந்த செடியில் இருந்து பிடுங்கி பச்சையாக  சாப்பிடும் போது கிடைக்கக்கூடிய சுவையே தனி தான்... சிலருக்கு பச்சையாக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக்காது தலைவலி வாந்தி போன்றவை வரும். அதனால் குழந்தைகளை கூட்டி வருபவர்கள்  கூடவே அச்சு வெல்லம் அல்லது கருப்பட்டி ஏதாவது கொண்டு வருவார்கள். அந்த பச்சை கடலையுடன் அச்சு வெல்லம் கருப்பட்டி சேர்த்து சாப்பிடும் போது அந்த ருசியே தனி தான்.  உடம்பிற்கும் எந்தவித பிரச்சினையும் வராது.. பின் சாயங்காலம் ஆறு  மணிக்குள் எல்லா கடலைகளையும்  பிரித்து எடுத்ததும் அந்தத் தோட்டக்காரரிடம்  கொடுப்பார்கள். அவர்  அளப்பதற்கு பக்கா போன்று இருக்கும் ஒரு  மரக்காவில் வைத்து அளந்து எடுப்பார்.. அந்த மரக்காவில் ஆறில் ஒரு பங்கு கடலை பிடுங்கியவர்களுக்கும்  மீதி ஐந்து பங்கு தோட்டக்காரருக்கும் என அளந்து எடுப்பார்.. 

கடலைகளை இரவில் வீட்டிற்கு கொண்டு வந்து  அவிப்பார்கள். அன்று பலரது வீட்டில் இந்தக் கடலை தான் இரவு உணவாக இருக்கும். இன்றும் அந்த இளமைக்கால நாட்களை எல்லாம் நினைத்து பார்க்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கிறது .... இன்றும்  எங்கள் கிராமங்களில் ஒரு சில இடங்களில் இந்த வேர்க்கடலையை பயிரிடுகிறார்கள்  ஆனால் முன்பு மாதிரி இப்பொழுது கடலை பிடுங்குவதற்கு ஆட்கள் அதிகமாக செல்வதில்லை.. அதற்கு பதில் இப்பொழுதெல்லாம்  மெஷின் மூலமாகவே கடலைகளை பிடுங்கி விடுகிறார்கள்...
அதேபோல இந்த வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கும் கடலை எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தும் போது சமையல் ருசியாகவும் அதே சமயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.



இன்று பல பிராண்டுகளில்  கடலை எண்ணெய் விற்பனைக்கு வந்தாலும்  மர செக்கில்  ஆட்டக்கூடிய கடலை என்னைக்கு தான்  மவுசு  அதிகம்... இந்த கடலையை பயிரிடும் தோட்டக்காரர்கள் அவர்கள் தேவைக்கும்  அடுத்த விதைப்புக்கு தேவையான விதையை எடுத்த பின்பு மீதி உள்ளவற்றை மர செக்கில்   கொடுத்து ஆட்டி  எண்ணையாக பயன்படுத்துகிறார்கள் அந்த எண்ணையே ஒரு வித வாசம் தான்... செக்கில் ஆட்டும்போது அதனுடன் புண்ணாக்கும் சேர்த்து ஆட்டுவார்கள் .. அதில் உள்ள மீதி சக்கையை  மாட்டிற்கு வைத்துவிடுவார்கள்.

இன்றைய ஆடம்பரமான காலத்தில் எதையுமே பாக்கெட்டில் அடைத்து வைத்து விலை அதிகமாக இருக்கும் வெளிநாட்டு பொருட்களை வாங்குவதில் தான் அதிக அளவு ஆர்வம் காட்டுகிறார்கள்... ஆனால் நம் ஊரில் இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த மாதிரியான பொருள்கள் நம்முடைய தெருவிற்கே வந்து விற்றாலும் கூட அதனை யாரும் வாங்க முன் வர மாட்டார்கள்..பொதுவாக நம்மில் பலர் எதையுமே இயற்கையாக அதே சமயம் மலிவாக  கிடைக்கக்கூடிய பொருட்களை உதாசீனம் தான் படுத்துகிறார்கள்..  ஆனால் அந்த பொருட்களில்தான் எண்ணற்ற  வகையான சத்துக்கள் அடங்கியிருக்கும்.. இனிமேலாவது இந்த மாதிரி இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுங்க.. இந்த மாதிரி பொருட்கள்ல  எல்லாம் கலப்படம் இருக்காது  ஆரோக்கியம் மட்டுந்தான் இருக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய.. அதிபர் இப்ராகிம் ரைசி உள்ளிட்ட 8 பேரும் பலி?.. சோகத்தில் ஈரான்!

news

Friendship Marriage: காதலும் கிடையாது.. காமமும் கிடையாது.. ஜப்பானில் இப்படியும் கல்யாணம் நடக்குது!

news

சார்லஸ் மன்னரை விட பெரும் பணக்காரர்களான.. பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக், மனைவி அக்ஷதா மூர்த்தி

news

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர்... விபத்துக்குள்ளானது.. மீட்புப் படைகள் விரைந்தன!

news

3 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்.. 21ம் தேதி 24 மாவட்டங்களில் சூப்பர் மழை.. வானிலை மையம்!

news

தோனி விக்கெட்டை வீழ்த்தியதை பெங்களூரு கொண்டாடியிருக்கக் கூடாது - மைக்கேல் வாகன்

news

அந்தமானில் தொடங்கியது தென் மேற்குப் பருவ மழை.. 3 நாட்களுக்கு முன்பாகவே வந்து சேர்ந்தது!

news

வங்கக் கடலில் புயல் உருவாகப் போகிறது.. ஆனால் நம்மிடம் வராது.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

news

மே 19 .. வளர்ச்சி தரும் வைகாசி வளர்பிறை ஏகாதசி.. பெருமாள் வழிபாடு நலம் தரும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்