மயிலாடுதுறை: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்க இருப்பதால் அடிக்கடி பிரதமர் மோடி தமிழ்நாடுக்கு வரத் தொடங்கி இருக்கிறார். அண்மையில் ஏற்பட்ட இரண்டு இயற்கை பேரிடர்களுக்கு ஒரு பைசா கூட நிதி தரவில்லை. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பிரதமர் மோடியை பார்த்து ஏமாற மாட்டார்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இன்று சென்னை வரும் பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதையொட்டி சென்னையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் வரவுள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரக் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக தமிழகம் வருகிறார் மோடி. சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் திருநெல்வேலியில் பாஜக பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். திமுக அரசை கடுமையாகத் தாக்கிப் பேசி திமுகவிடையே அதிருப்தி அலையை ஏற்படுத்தினார். இதனால், திமுகவினரும் பதிலுக்க மோடியை பலமாக தாக்கி பேசி வருகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை திருவாரூர் நாகை மாவட்டங்களின் ரூபாய் 656 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூபாய் 423 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அத்துடன் 12,653 பயனாளிகளுக்கு ரூ. 655.44 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்டங்களை வழங்கி பின்னர் அவர் அப்போது பேசுகையில்,
தேர்தல் அறிவிக்க இருப்பதால் அடிக்கடி பிரதமர் மோடி தமிழ்நாடு வரத் தொடங்கி இருக்கிறார். வாக்கு மட்டும் போதும் என்று நினைத்து தமிழ்நாட்டுக்கு வருகிறார் மோடி. அண்மையில் ஏற்பட்ட இரண்டு இயற்கை பேரிடர்களுக்கு ஒரு பைசா கூட நிதி தரவில்லை. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மோடியை பார்த்து ஏமாற மாட்டார்கள். தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபடும் திராவிடல் மாடல் அரசின் பக்கமே மக்கள் நிற்பார்கள் என்று கூறியுள்ளார்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}