சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பெரியார் குறித்த விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பெரியார் அமைப்பினர் மற்றும் மே 17 இயக்கங்கள் சீமான் வீட்டு முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமான் வீடு இருக்கும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி இருந்தார். அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சீமான் தொடர்ந்து பெரியார் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சீமானின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பிய, சீமானிடம் ஆதாரம் கேட்டு, கடந்த 16ம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டை, தந்தை பெரியார் அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, சீமான் வீட்டை நோக்கி கல் வீசியதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து இதில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இந்த நிலையில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சீமானின் வீட்டு முன்பு வரும் 22 ஆம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, பெரியார் திக, திவிக அமைப்பினர் மற்றும் மே 17 இயக்கத்தினர் முற்றுகைப் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து அப்பகுதியில் கூடினர். இதையடுத்து 200க்கும் மேற்பட்ட போலீசார் சீமானின் வீட்டு முன்பு குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களுக்கு எதிராக சீமான் கட்சியினரும் உருட்டுக்கட்டைகள் சகிதம் நேற்று இரவு முதலே வீட்டு முன்பும் வீட்டைச் சுற்றிலும் ஆங்காங்கே நின்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
முன்னதாக நேற்று இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசுகையில், பெரியார் மீது விமர்சனம் வைத்த பின், பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் பொய் என்று வருகிறார்கள். 15 வருடமாக எங்கிருந்தீர்கள். அந்த புகைப்படம் முதல் முறையாக வெளிவந்த போதே சொல்ல வேண்டியதுதானே. எத்தனை பேர் எடிட் செய்தீர்கள்.. நீங்க எல்லாம் பெரிய எடிட்டரா.. என்ன காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
பெரியாரா, பிரபாகரனா என்று மோதி பார்ப்போம் என்று ஆகிவிட்டது. பெரியாரை விமர்சித்ததற்கு திராவிடர் கழகமே அமைதியாக இருக்கிறது. மற்ற அமைப்புகள் தான் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பெரியார் குறித்த எனது கருத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு வந்தால், நான் அங்கு பதிலளிப்பேன் என்று ஆவேசமாக கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!
திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!
கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?
விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது
சிறுநீரக கற்களைத் தடுக்கலாம்.. கவலைப்படாம.. இதைக் கொஞ்சம் பாலோ பண்ணிப் பாருங்க
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.520 உயர்வு!
{{comments.comment}}