லிமா: பெரு நாட்டின் ஆபாசப் பட உலகின் ராணி போல வலம் வந்தவரான தைனா பீல்ட்ஸ் திடீரென மரணமடைந்துள்ளார். அவருக்கு 24 வயதுதான் ஆகிறது. ஆபாசப் பட உலகினர் குறித்த பரபரப்பான தகவல்களை வெளியிட்ட சில மாதங்களிலேயே அவரது மரணம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைனா பீல்ட்ஸ், பெரு நாட்டின் மிகப் பிரபலமான ஆபாசப் பட நடிகை. இவரது படங்களுக்கு அங்கு பெரிய கிராக்கியே உள்ளது. இவரது படங்கள் என்றாலே அது மிகப் பெரிய அளவில் விரும்பிப் பார்க்கப்படும். அந்த அளவுக்கு பிரபலமாக வலம் வந்தவர் பீல்ட்ஸ்.
இந்த நிலையில்தான் அவர் தனது வீட்டில் பிணமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவர் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் ஆபாசப் பட உலகைச் சேர்ந்த நடிகைகளை எந்த அளவுக்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மோசம் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள், கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது குறித்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இதனால் பெரு ஆபாசப் படஉ லகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் அவரது மறைவுச் செய்து வந்துள்ளது.
இதுகுறித்து பீல்ட்ஸுக்கு நெருக்கமானவரான அலெஜான்ட்ரா ஸ்வீட் கூறுகையில், தைனாவை அனைவரும் நினைவுகூறுவோம். மிகவும் நல்ல பெண் அவர். தூய்மையான உள்ளத்துக்குச் சொந்தக்காரர். எங்கிருந்தாலும் அவர் ஒரு தேவதையாக வலம் வருவார் என்று கூறியுள்ளார்.
முன்னதாக தைனா கொடுத்திருந்த பரபரப்பான பேட்டியில், தான் ஆபாசப் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் சந்தித்த பல்வேறு கொடுமைகளை விளக்கியிருந்தார். தன்னை பாலியல் ரீதியாக பலரும் தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.
முதலில் அதிலிருந்து தான் விலக முடியாமல் தத்தளித்ததாகவும், பின்னரே தான் சுதாரித்துக் கொண்டதாகவும் கூறியிருந்தார் தைனா பீல்ட்ஸ்.
வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!
சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
{{comments.comment}}