சென்னை: டிசம்பர் 4ம் தேதி சேலத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி மனு அளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் கடந்த அக்டோபர் மாதம் கரூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது விஜய்யை காண அதிகளவில் கூட்டம் வந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னர் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தவெக தலைவர் விஜய் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து அமைதி காத்து வந்த விஜய், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சென்னை வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பின்னர் தனது கட்சிப்பணிகளை தொடங்கி செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் சென்னையில் தவெக சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் விஜய் கலந்து கொண்டு பேசுகையில், எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்று தெரிவித்ததுடன், திமுக குறித்து கடும் விமர்சனமும் செய்தார்.
அதன்பின்னர் சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று சேலம் காவல் ஆணையரிடம் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் அடுத்த மாதம் 4ம் தேதி அனுமதி கோரப்பட்டுள்ளது. சனிக்கிழமைக்கு பதிலாக அதில் வியாழனன்று விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. கோட்டை மைதானம், போஸ் மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட 3 இடங்களில் ஒன்றில் அனுமதி வழங்க கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}