சென்னை: ஆளுநர் மாளிகை வாசல் அருகே பெட்ரோல் குண்டு வீசிக் கைதான ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுக்க போலீஸார் கோர்ட்டில் மனு செய்துள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவுடி கருக்கா வினோத். இவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில்தான் இவர் ஜாமீனில் விடுதலையாகி வந்தார். வந்தவர், நேராக ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டை வீசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த 25ம் தேதி இவர் பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகையின் வாயிலில் வீசியுள்ளார். தனி ஆளாக வந்து துணிச்சலாக இவர் பெட்ரோல் குண்டு வீசியது பல்வேறு கேள்விகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. கருக்கா வினோத்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது ரவுடி கருக்கா வினோத்தை விசாரிக்க காவல் துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை பெருநகர காவல் துறை சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.
கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் அவர் எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார், யார் சொல்லி செய்தார், யாராவது இவருக்குப் பின்னணியில் உள்ளனரா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும்.. பல குழப்பங்கள் நீங்கும் என்பதால் கருக்கா வினோத் போலீஸ் காவலில் சொல்லப் போகும் தகவல்களுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}