புதுடில்லி: இன்னும் ஒரு சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் விறுவிறுப்பாக தேர்தலுக்கான வேலைகளை செய்ய தொடங்கியுள்ளன. தேர்தல் அறிக்கை, யாருடன் கூட்டணி, என்ன திட்டங்களை அறிவிக்கலாம் என பல்வேறு விதமான செயல்களில் கட்சிகள் மும்முரமாகியுள்ளன. இந்நிலையில் மத்தியில் ஆளும் கட்சி என்ன என்ன திட்டங்களை வெளியிடும் என்று பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
முதல் கட்டமாக தேர்தலுக்கு முன்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வெகுவாக குறைக்க மத்திய அரசு திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. சமீபத்தில் தான் வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையும், வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையும் குறைந்தது. இந்த விலை குறைப்பை தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த வருடம் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த விலை உயர்வால் அனைத்து விலையும் உயர்ந்தது. நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல் விலையால் மக்கள் மிகுந்த கவலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பின்னர் 5 மாநிலத் தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது.
இந்நிலையில் மக்கள் நலன் கருதி இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் விலையை குறைக்கும் படி மத்திய அரசு கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முனைப்புகளில் தீவிரம் காட்டி வருகிறது பாஜக அரசு.
பெட்ரோல் விலைக் குறைப்பு மட்டுமல்லாமல் மக்களுக்கு பலன் தரக் கூடிய மேலும் பல திட்டங்களையும் அடுத்தடுத்து மத்திய அரசு அறிவிக்கலாம் என்ற பொதுவான எதிர்பார்ப்பும் உள்ளது. இதுதவிர இடைக்கால பட்ஜெட்டிலும் கூட பல அறிவிப்புகள், சலுகைகளை மக்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு இப்போதே தேர்தல் பொறுப்பாளரை நியமித்த பாஜக.. மாஸ்டர் பிளான் என்னவோ!
போர்க்கொடி உயர்த்தும் கூட்டணி கட்சிகள்.. பொறுமை காக்கும் திமுக.. காத்திருக்கும் அதிமுக!
திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் குலசை தசரா விழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து வழக்கு... அக்டோபர் 30ல் தீர்ப்பு: குடும்ப நல நீதிமன்றம்
ஸ்டிராங் ஆன எடப்பாடி பழனிச்சாமி.. தனித்து விடப்பட்டாரா கே.ஏ.செங்கோட்டையன்.. என்ன திட்டம்?
திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
தமிழ்நாடு, பீகார், மே. வங்காள தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: கில் கேப்டன்!
5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
{{comments.comment}}