"டைவர்ஸுக்கும் போட்டோஷூட்".. என்னங்கடா இப்படி கிளம்பிட்டீங்க!

May 01, 2023,01:33 PM IST

சென்னை: கல்யாணத்துக்குத்தான் விதம் விதமான போட்டோஷூட் நடத்துகிறார்கள் என்றால் இப்போது டைவர்ஸுக்கும் போட்டோஷூட் நடத்த ஆரம்பித்து விட்டனர்.

இப்பெல்லாம் எதற்கெடுத்தாலும் பப்ளிசிட்டி, எதை எடுத்தாலும் போட்டோஷூட்.. என்ன விஷயமாக இருந்தாலும் கட் அவுட் பேனர் என்றாகி விட்டது. அதிலும் இந்த வெட்டிங் போட்டோஷூட் பண்ணற அலும்பல் இருக்கே.. அய்யோடா முடியலை சாமி!

முன்பெல்லாம் பெண்ணையும் மாப்பிள்ளையையும் கல்யாணத்தன்னிக்கு மட்டும்தான் விதம் விதமாக உட்கார வைத்து, நிற்க வைத்து என்று போட்டோ எடுப்பார்கள். ஆனால் இப்பெல்லாம் வேற லெவலுக்குப் போய் விட்டனர். ரொம்ப கிரியேட்டிவாக மாறி விட்டது போட்டோகிராபி. கல்யாணத்திற்கு முன்னாடியே இதற்காக டூரெல்லாம் போகிறார்கள். அங்கு போய் அவர்கள் எடுக்கும் போட்டோக்களும் சரி, அதற்கு அவர்கள் கொடுக்கும் போஸும் சரி.. வேற ரகமாகவே இருக்கிறது.



இப்படிப்பட்ட போட்டோஷூட்களில் முகம் சுளிக்க வைக்கும் பல காட்சிகள் இப்போது அரங்கேறி வருகின்றன. கவர்ச்சி கொப்பளிக்கிறது பல போட்டோஷூட்களில். இதையும் கல்யாண வீட்டார் ரசிக்கவே செய்கிறார்கள். என்ன செய்வது!

இந்த நிலையில் இப்போது இன்னொரு போட்டோஷூட் படு வேகமாக பரவி வருகிறது. அதுதான் விவாகரத்து போட்டோஷூட். விவாகரத்து பெற்ற ஒரு பெண் தனக்கு மண வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைத்ததைக் கொண்டாடும் வகையிலான போட்டோஷூட் இது. இப்படி ஒரு போட்டோஷூட் புகைப்படங்கள் டிவிட்டரில் பரவி வருகின்றன.

இது எந்த ஊர், பொண்ணு யாரு என்று தெரியவில்லை. தானும் முன்னாள் கணவரும் இருக்கும் புகைப்படத்தை ஆக்ரோஷமாக கிழிப்பது போலவும், அவரது புகைப்படத்தை காலில் போட்டு மிதிப்பது போலவும் காட்சிகள் உள்ளனர். இந்த புகைப்படங்கள் இப்போது டிவிட்டரில் வேகமாகப் பரவி வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்