வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் வாஷிங்டன் டிசியில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் மற்றும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி போடோமேக் ஆற்றில் விழுந்தன. விபத்துக்குள்ளான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 60 பயணிகளும், 4 பணியாளர்களும் இருந்தனர். அமெரிக்க ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் இருந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த 19 பேரின் உடல்கள், விமானம் விழுந்த போடோமேக் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளி செய்தி நிறுவனமான பிசிஎஸ் கூறுகிறது. ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் 33 வது ஓடுதளத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று விமான போக்குவரத்து நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழப்பு குறித்த அமெரிக்க அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவை சேர்ந்த பிஎஸ்ஏ ஏர்லைன்ஸூக்கு சொந்தமான விமானம் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, ராணுவ ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான புறப்பாடுகளும் தரையிறக்கங்களும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களை தேடும் பணியும் தற்பொழுது முடிக்கி விடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}