அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்திய விமான விபத்துக்குள்ளாகிய விபத்து குறித்து முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 2 விமானிகள் மற்றும் 10 விமானப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த விபத்து நாட்டையே கதிகலங்கச் செய்துள்ளது.
இந்த நிலையில், விபத்து குறித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். இது ஒரு மனதை உடைக்கும் பேரழிவு. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட மக்களுடன் உள்ளன. விவாதிக்க முடியாத துயரத்தில் உள்ளோம். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த தேசம் துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை உடைத்துள்ளது. இந்த சோகமான நேரத்தில், அதனால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
மக்களவைத் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி
அகமதாபாத் ஏர் இந்தயா விபத்து மனதை உடைக்கிறது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினர் உணரும் வலி மற்றும் பதட்டம் கற்பனை செய்ய முடியாதது. நிர்வாகத்தின் அவசர மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு உயிரும் முக்கியம். ஒவ்வொரு நொடியும் முக்கியம். காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவ தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட அனைவருடனும், விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் மிகுந்த வருத்தம். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
{{comments.comment}}