சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி ஜிஎஸ்டி சாலையில் கிண்டி முதல் பல்லாவரம் வரையிலான சாலையில் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் அவர் முதலில் சென்னையில் புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைக்கிறார். ரூ. 1260 கோடி மதிப்பீட்டில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான அலங்காரங்களுடன் இந்த முனையம் மிகவும் அதி நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். அதேபோல ��ாம்பரம் - செங்கோட்டை புதிய எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதுதவிர 37 கிலோமீட்டர் தொலைலவிலான திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் பாதை மாற்றப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
பிற்பகலில் சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மாலையில் ரூ. 3700 கோடி மதிப்பிலான பல்வேறு சாலைத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி. இதே விழாவில் மதுரையில் கட்டப்பட்டுள்ள 7. 3 கிலோமீட்டர் நீளம் கொண்ட தமிழ்நாட்டிலேயே மிகவும் நீளமான பாலத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
போக்குவரத்து மாற்றம்
பிரதமர் வருகையைத் தொடர்ந்து விமானநிலையம் உள்ள ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கிண்டி முதல் பல்லாவரம் வரையிலான சாலையில் பிற்பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். அனைத்து வாகனங்களும் வேளச்சேரி வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் வண்டலூரிலருந்து பூந்தமல்லி வழியாக திருப்பி விடப்படும்.
இந்த காலகட்டத்தில் மெட்ரோ அல்லது புறநகர் ரயில்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}