க.சுமதி
டில்லி : இன்று தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜெகதீப் தன்கர் ராஜினாமா சர்ச்சைக்குப் பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற நிலையில் நாடாளுமன்றம் கூடியுள்ளது. முதன் முறையாக சி பி ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்தை தலைமையேற்று நடத்துகிறார். நடப்புக் கூட்டத் தொடரில் 14 மசோதாக்களை நிறைவேற்ற இருப்பதாக அரசு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. பீகார் தேர்தல், டெல்லி கார் குண்டு வெடிப்பு, எஸ் ஐ ஆர் முறைகேடுகள் போன்றவற்றை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் துவக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், நடந்து முடிந்த பீகார் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றுகிறது. இந்தியா எப்போதும் எந்த சூழலிலும் ஜனநாயகத்தை இழக்காது. நாடாளுமன்ற குளிர் காலகூட்டத்தொடர் இன்று தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும். குளிர்கால கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்களது கடமையை செய்ய முன் வரவேண்டும். தோல்வியால் ஏற்பட்ட விரக்தியிலிருந்து மீண்டு வந்து எதிர்க்கட்சிகள் கடமையாற்ற வேண்டும். தொடர் வெற்றியால் எங்களுக்கு அகங்காரம் இல்லை. இவ்வாறு தமது உரையில் தெரிவித்தார்.

மேலும் காரைக்குடி அருகே சென்ற வாரம் நடந்த பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த பிரதமர் மோடி உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 2,000,00, காயம் அடைந்தோருக்கு ரூபாய் ரூ.50,000 நிதி மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
(க.சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
பிரண்டை துவையல்.. டேஸ்ட்டானது.. உடம்புக்கு ரொம்ப பூஸ்ட்டானதும் கூட!
சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்
குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
தேரே இஷ்க் மெய்ன் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல்.. புதிய சாதனை படைத்த நடிகர் தனுஷ்!
பொத்துக்கிட்டு ஊத்துதுங்க மழை.. காலையிலிருந்து சென்னையிலும், புறநகர்களிலும்!
டிட்வா புயலுக்குப் போட்டியாக விறுவிறுன்னு ஏறி வரும்.. தங்கம் விலை.. அம்மாடியோவ்!
அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!
மசாலா பாண்டு விவகாரம்...கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை சம்மன்
டிசம்பர் மாதம் வந்தாச்சு.. களை கட்டும் விழாக்கள்.. என்னெல்லாம் இருக்கு பாருங்க!
{{comments.comment}}