Donald Trump.. வாழ்த்துகள் நண்பா.. டிரம்புக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

Nov 06, 2024,06:31 PM IST

டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியைப் பெற்றுள்ள  டொனால்டு டிரம்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்ப்பும், பிரதமர் மோடியும் கடந்த ஆண்டுகளில் நல்ல நண்பர்களாகி விட்டனர். கடந்த முறை நடந்த அதிபர் தேர்தலின்போது பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு ஆதரவாக பேசியிருந்தார். அதேபோல டிரம்ப் அதிபராக இருந்தபோதும், மோடியுடன் நல்லுறவை பேணி வந்தார். அமெரிக்காவில் உள்ள மோடி ஆதரவாளர்களும் கூட டிரம்ப்புக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர். அவருக்கு ஆதரவாக வாக்கும் சேகரித்து வந்தனர்.



இந்த நிலையில் இந்தத் தேர்தலில் டிரம்ப் யாரும் எதிர்பாராதவிதமாக அபாரமான வெற்றியைப் பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் முதல் ஆளாக வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எனது அருமை நண்பர் டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றிக்காக எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  கடந்த கால உங்களது ஆட்சியின் வெற்றியின் மீது இந்த புதிய வெற்றி கட்டி எழுப்பப்பட்டுள்ளது. உங்களது அதிபர் பதவிக்காலத்தில் இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவு மேலும் வலுப்பெற்று, இரு நாடுகளும் உலக விவகாரங்களில் இணைந்து செயல்படும் என்று நம்புகிறேன்.

இருவரும் இணைந்து இரு நாட்டு மக்களின் முன்னேற்றம், உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்