டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பார்க்க வந்த குட்டீஸ்களுடன் ஜாலியாக விளையாடிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்திக்க வந்த குழந்தைகளுடன் அவர் ஜாலியாக சில விளையாட்டுக்களை விளையாடியுள்ளார். இந்த வீடியோ பிரதமரின் டிவிட்டர் பக்கத்திலோ அல்லது நரேந்திர மோடியின் தனிப்பட்ட பக்கத்திலோ இல்லை. ஆனால் பாஜகவினர் இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒரு சிறுமி மற்றும் சிறுவனின் காதுகளை இழுத்து இருவர் தலைகளையும் முட்டி முட்டி விளையாட்டு காட்டுகிறார். பின்னர் அந்த சிறுமியின் தலையில் ஒரு தட்டு தட்டி விளையாடுகிறார். மீண்டும் அவர்களுக்கு நாணயத்தை வைத்து மேஜிக் செய்து காட்டி இரு சிறுவர்களுடனும் விளையாடி மகிழ்கிறார்.

தனது நெற்றியில் ஒரு நாணயத்தை வைத்துக் கொண்டு தலையின் பின்புறம் தட்டி முன்புறம் அந்த காசை எடுக்கிறார். இதேபோல ஒரு குழந்தையின் நெற்றியில் காசை வைத்து அவரது தலையைத் தட்டி காசை எடுக்கிறார்.

இந்த "மோடி மாஜிக்" குழந்தைகளிடையே சிரிப்பை வரவழைக்கிறது. கூட இருந்தவர்களும் ஜாலியாக சிரிக்கிறார்கள். இந்த வீடியோவை பகிரும் பலரும், பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரதமரின் குழந்தைத் தனம் தற்பொழுது வெளி வருவதாகவும், அவரின் மற்றொரு முகம் இது என்றும் நெட்டிசன்கள் கமண்ட் செய்து வருகின்றனர்.
மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
புரட்டாசியில் மட்டன் கோலா உருண்டையா.. அதை விட சுவையான வாழைப்பூ கோலா கட்லெட்!
தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!
நாவல் மரத்தின் வேரும் எறும்பு கூட்டமும்
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டணம்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
விண்ணாய்ப் பரந்தும் விரிந்தே இருப்பவள்
பிளாட்டினம்
Monday Motivation: மாயமான பண்புகள்!
{{comments.comment}}