டெல்லி: மொரீசியஸில் நடைபெற உள்ள 57வது தேசிய தினவிழாவில் கலந்து கொள்வதற்காக இன்று மொரிசியஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு
மொரீசியஸில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று மொரீசியஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு பிரதமர் மோடி அவர்களுக்கு அந்நாட்டு ராணுவத்துடன் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பிறகு மாலை அணிவித்து ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்றார் அந்நாட்டு பிரதமரும், நண்பருமான டாக்டர் நவின்சந்திர ராம்கூலம். இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெறவுள்ள 57வது தேசிய தின விழாவில் பங்கேற்கிறார்.
இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி தரம் கோகூல், மற்றும் பிரதமர் டாக்டர் நவின்சந்திர ராம்கூலமை சந்தித்து உரையாற்ற இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் மொரிசியஸ் பயணம் இந்தியா-மொரீஷியஸ் உறவுகளில் ஒரு பிரகாசமான அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மொரிசியஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் மொரிஷியஸில் தரையிறங்கினேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற சிறப்புச் செயலுக்கு எனது நண்பர் பிரதமர் டாக்டர் நவின்சந்திர ராம்கூலமுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த ஒரு வருகை ஒரு மதிப்புமிக்க நண்பருடன் ஈடுபடவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும் ஒரு அற்புதமான வாய்ப்பாகும். இன்று, நான் ஜனாதிபதி தரம் கோகூல், பிரதமர் நவின்சந்திர ராம்கூலம் ஆகியோரைச் சந்தித்து மாலையில் ஒரு சமூக நிகழ்ச்சியில் உரையாற்றுவேன் என பதிவிட்டுள்ளார்.
தங்கம் விலை இன்றும் உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை உயர்வு!
மார்கழி 02ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 02 வரிகள்
Healthy Cooking: சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி?
சிந்தனைத்துளிகள்.. ரகசியமான வாழ்கைப் பாதையில் மாற்றம் ஒன்றே மாறாதது!
ஆணுக்கு சமமாய் நானும் தான்!
The Power of Hope... நம்பிக்கையின் சக்தி.. பலம் தரும்.. சவால்களைச் சந்திக்க தைரியம் தரும்!
கோவிந்தனை கொண்டாடுவோம்.. கோகுலத்தில் விளையாடுவோம்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆறுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.. ஏன் தெரியுமா?
மார்கழி மாதம் முதல் பிரதோஷம் இன்று.. அதன் சிறப்புகள் தெரியுமா?
{{comments.comment}}