3 மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி.. தெலங்கானா வாக்காளர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

Dec 03, 2023,05:59 PM IST

டெல்லி: சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல தெலங்கானா மக்களுக்கும், பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்காக நன்றி சொல்லியுள்ளார் பிரதமர் மோடி.


நான்கு மாநிலத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வசமிருந்து சத்திஸ்கர் மற்றும் ராஜஸ்தானை பறித்துள்ளது. மேலும் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியையும் தக்க வைத்துள்ளது. இதை பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில் பாஜகவின் வெற்றி குறித்து பிரதமரி நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்து:




தெலங்கானாவைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் பாஜகவுக்கு அளித்து வரும் ஆதரவுக்காக நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போயுள்ளது. இது வரும் காலத்திலும் அதிகரிக்கும். தெலங்கானாவுடன் எங்களது உறவு பிரிக்க முடியாதது. தொடர்ந்து தெலங்கானா மக்களுக்காக பாடுபடுவோம். இந்த வெற்றிக்காக பாடுபட்ட அத்தனை பாஜக தொண்டர்களின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்.


மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன். சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் தேர்தலில்  மக்கள் அளித்துள்ள தீர்ப்பைப் பார்க்கும்போது, நல்லாட்சி தரும் அரசியலுக்கும், வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவாக உள்ளனர் என்று தெரிகிறது. இதைத்தான் பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. 


இந்த மாநில மக்கள் பாஜகவுக்கு அளித்துள்ள ஆதரவுக்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர்களது நலனுக்காக தொடர்ந்து அயராமல் பாடுபடுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.


கட்சி தொண்டர்களுக்கு சிறப்பு நன்றிகள். அவர்களது பணி மிகச் சிறந்தது. அசாதாரணமானது. ஓய்வு ஒழிச்ல் இல்லாமல் பாஜக ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் சரியாக கொண்டு போய்ச் சேர்த்தவர்கள் அவர்கள்தான் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்