சென்னையில்.. பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ.. தியாகராய நகரில்.. ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிப்பு!

Apr 09, 2024,11:47 AM IST

சென்னை: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்காக காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.


7வது முறையாக தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார் பிரதமர் மோடி. சென்னை, நீலகிரி, வேலூர், ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. முதற்கட்டமாக சென்னை தியாகராய நகரில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் இன்று மாலை பங்கேற்க உள்ளார். 


பின்னர் வாகன பேரணியை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ரோடு ஷோவில் பிரதமரின் பாதுகாப்பு கருதி பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை அறிவித்துள்ளது.


அதன்படி, ரோடு ஷோ நடத்தும் போது, பட்டாசு வெடிக்க கூடாது. .அலங்கார வளைவுகளை அமைக்கக் கூடாது.. மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் முழக்கங்களை எழுப்பக்கூடாது.. போன்ற நிபந்தனைகளை காவல்துறை அறிவித்துள்ளது.



போக்குவரத்து மாற்றம்:


பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி, சென்னை தியாகராயநகர் பகுதிகளில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் பிரதமர் செல்லும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களையும் காவல்துறை அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி சாலை முதல் அண்ணா சாலை, ஓ.எம்.சி.ஏ வரையிலும், நந்தனம் முதல் தியாகராய நகர் வரையிலும், மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்திற்கு நெரிசல் மிகுந்த பகுதிகளாக அறிக்கப்பட்டுள்ளது. 


இதனால் ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிப்பெட் சாலை, 100 அடி சாலை, அண்ணா சாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை தியாகராய நகர் சாலை ஆகிய பகுதி சாலைகளில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது. இது தவிர தியாகராய நகர், வி.என் சாலை, ஜி.என் செட்டி சாலை, வடக்கு போக் சாலைகளில் வாகனங்களை நிறுத்தவும் தடை  விதித்துள்ளது.


நாளை வேலூர், நீலகிரி பயணம்:


இன்று சென்னையில் நடைபெறும் வாகன பேரணியை முடித்துவிட்டு, நாளை பிரதமர் நரேந்திர மோடி வேலூர் மற்றும் நீலகிரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார். அப்போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்