பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

Apr 05, 2025,12:04 PM IST

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தை  திறந்து வைப்பதற்காக  நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமரின் ‌வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


ராமேஸ்வரத்தில் 550 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி  நாளை திறந்து வைக்கிறார். 


இதற்கு முன்னதாக  வெள்ளிக்கிழமை இலங்கை வந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று  பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் அநுரகுமாரா பிரதமரை வரவேற்று கௌரவித்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

அதன்படி இன்று மாலை இலங்கை அதிபர் அநுரகுமாராவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 




இலங்கை பயணத்தை முடித்துவிட்டு, நாளை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மண்டபம் பகுதிக்கு காலை 11.50 மணிக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.


அதன் பிறகு ராமேஸ்வரம் டூ தாம்பரம் இடையேயான ரயில் சேவையை கொடியசைத்து துவங்கி வைக்கிறார். தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலுக்கு சென்று தான் சாமி தரிசனம் செய்கிறார். அதன் பிறகு ராமேஸ்வரம் அரசு தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலம் சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கிறார். விழா நிறைவடைந்த பிறகு மதியம் 2 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்.



பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு  3500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 10 எஸ்.பி., 40 டி.எஸ்.பி., என உயர் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாம்பன் பாலம் திறக்கும் இடம், ராமேஸ்வரம் ராமநாத கோவில், பொதுக்கூட்டம் நடைபெறும் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்டபம் முதல் ராமேஸ்வரம் கோவில் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு ராமேஸ்வரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது‌.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வராது... சென்சார் வழக்கு ஜனவரி 21க்கு ஒத்திவைப்பு

news

முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிய டாக்டர் ராமதாஸ்... திமுக பக்கம் டேக் டைவர்ஷன் எடுக்கத் திட்டமா?

news

தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்

news

தேசியக் கட்சிகள் இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாதா??

news

பிறப்பு முதல் இறப்பு வரையிலான 50 வகையான அரசு சேவைகள்... இனி வீட்டிலிருந்தே பெறலாம்

news

நெருக்கடியை சந்திக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்...கனத்த மெளனம் காக்கும் திரையுலகம்

news

நாம் சுவைக்க மறந்த வேர்க்கடலை சட்னி.. அதுக்குப் பின்னாடி இருந்த பாலிட்டிக்ஸ் தெரியுமா?

news

ஆஸ்கார் ரேசில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'...மேலும் 5 இந்திய படங்களும் இருக்கு

news

சின்னச் சின்னதா மாறுங்க.. ஹெல்த்தி ஆய்ருவீங்க.. Stay Healthy With Small Changes!

அதிகம் பார்க்கும் செய்திகள்