டில்லி : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகாகும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடுவதற்காக பிரதமர் மோடி பிப்ரவரி 05ம் தேதி பிரயாக்ராஜ் செய்ய உள்ளார். பிரதமர் புனித நீராடுவதற்காக எதற்காக இந்த குறிப்பிட்ட நாளை தேர்வு செய்துள்ளார் என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மகாகும்பமேளா ஜனவரி 13ம் தேதி துவங்கி, பிப்ரவரி 26 வரையிலான 45 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதாவது மகரசங்கராந்தி துவங்கி, மகா சிவராத்திரி வரை இந்த விழா நடைபெறும். இதில் கலந்து கொண்டு புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால் லட்சக்கணக்கானவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இதில் வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி பிரதமர் மோடியும் கலந்து கொண்டு புனித நீராட உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வசந்த பஞ்சமி, அமாவாசை போன்ற நாட்கள் தான் சிறப்புக்குரியதாக சொல்லப்படும். ஆனால் அஷ்டமி தினமான பிப்ரவரி 5ம் தேதியை பிரதமர் மோடி புனித நீராட தேர்வு செய்தது ஏன் என்பது குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன.

பஞ்சாங்கத்தின் படி, இந்த ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி அஷ்டமி திதியில் வருகிறது. இது குப்ர நவராத்திரி காலமாகும். திதிகளில் அஷ்டமி திதிக்கு என்று தனிச்சிறப்பு உள்ளது. இத பலருக்கும் தெரிவது கிடையாது. அதாவது, தவம், தியானம், ஆன்மிக பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் பலன் தரக் கூடிய நாள் இந்த அஷ்டமி திதியாகும். இந்த நாளில் புனித நீராடுவது, வழிபடுவது, தான தர்மங்கள் செய்வது ஆகியன மிகவும் விசேஷ பலன்களை தரக் கூடியதாகும். அஷ்டமி திதியில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஆன்மிக பலத்தை அதிகரிக்க செய்து, நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றக் கூடிய சக்தி வாய்ந்த நாளாகும்.
பிப்ரவரி 5ம் தேதியில் வரும் தை மாத அஷ்டமியை பீஷ்ம அஷ்டமி என்றும் சொல்லுவது உண்டு. மகாபாரதத்தில், பிதாமகன் என போற்றப்படும் பீஷ்மர், அர்ஜூனன் எய்திய முள் படுக்கையில் கிடந்த போது சூரிய பகவான் உத்திராயண காலத்தில், வளர்பிறையில் பயணிக்க துவங்கும் நாளுக்காக தான் காத்திருந்ததாக சொல்லப்படுகிறது. வளர்பிறை அஷ்டமி திதியில் தான் கிருஷ்ணர், பீஷ்மர் முன் தோன்றி, அவருக்கு மோட்சம் அளித்ததாக சொல்லப்படுகிறது. அதவால் இதை மகா அஷ்டமி என்றும் சொல்லுவதுண்டு.
மகா அஷ்டமியில் புனித நதிகளில் நீராடி, முன்னோர்களுக்கு பித்ரு தர்பணம் செய்வது மிகப் பெரிய புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபட வேண்டும். இதனால் முன்னோர்களுக்கு மோட்ச கதி கிடைப்பதுடன், நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}