டெல்லி: புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற வளாகத்திற்கு திடீரென பிரதமர் நரேந்திர மோடி விசிட் அடித்து நடந்து வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற வளாகம் பிரமாண்டமான முறையில் பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த கட்டுமானப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தற்போது கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிவுறும் நிலைக்கு வந்து விட்டன. கடைசிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த கட்டுமானத்தை டாடா புராஜக்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மிகப் பெரிய நாடாளுமன்ற அரங்கம், நூலகம், பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகம், இந்தியா ஹவுஸ் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், பல்வேறு கமிட்டிகளுக்கான அறைகள், டைனிங் அறைகள், மிகப் பெரிய பார்க்கிங் என சகல வசதிகளுடன் அதி நவீனமாக இது உருவாகி வருகிறது.
உலகத் தரம் வாய்ந்த நாடாளுமன்ற வளாகமாக இது உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் கட்டுமானப் பணிகளின் கடைசிக் கட்ட நிலவரத்தை நேரில் அறிய விரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி. இதையடுத்து திடீரென அவர் புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார். அவருடன் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் வந்திருந்தார். பெரிய அளவில் கூட்டம் சேர்க்காமல் சிம்பிளாக வந்த பிரதமரைப் பார்த்து கட்டுமானப் பணியில் கவனமாக இருந்த பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்த இடத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு பணிகளையும் நேரில் பார்த்து ஆய்வு செய்தார். சந்தேகங்களையும் அவர் கேட்டார். பின்னர் ஊழியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே கட்டுமானப் பணிகள் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் சற்று தாமதமாகி விட்டது. ஆனால் விரைவில் புதிய வளாகம் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}