சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லாததால் தினமும் அறிக்கை விடுகிறார். அவருக்கு பதில் சொல்வேண்டிய அவசியமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கண்ணகி நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். எழில் நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது கூறுகையில், தொழிலதிபர் அதானி விவகாரம் தொடர்பாக துறை அமைச்சர் செந்தில் பாலாஜியே சொல்லிட்டாரு, நீங்க டிவிஸ்ட் பண்ணாதீங்க. பாமக நிறுவனர் ராமதாசுக்கு வேற வேலை இல்ல, அதனால் தினமும் ஒரு அறிக்கை கொடுத்துட்டு இருப்பாரு. அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மழை வருகிறது என எதிர்பார்க்கிறோமோ இல்லையோ, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உரிய பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டல வாரியாக தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களை கூப்பிட்டு, என்ன செய்யப்போகிறோம் என்று தீர்மான போட்டு அவர்களிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் பேச இருக்கிறோம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?
மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!
அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!
திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை
பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!
17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்
மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு –அன்புமணி ராமதாஸ் வேதனை
சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்
மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!
{{comments.comment}}