துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!

Dec 15, 2025,01:01 PM IST

சென்னை: என்னை துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன். எனது எம்எல்ஏ பதிவியை ராஜினாமா செய்கிறேன். நீங்கள் சேர்ந்து கொள்ளுங்கள் என்று பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே.மணி பேசுகையில்,  பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் வலுவான கட்சியாக உள்ளது. 1980ல் இந்த கட்சியை ராமதாஸ் தொடங்கினார். இந்த இயக்கத்தை சாதாரணமாக அவர் கட்டி எழுப்பவில்லை. இரவு, பகல் பாராமல் கிராமங்கள், மலைகள், காடுகளில் நடந்தே பயணித்து மக்களை சந்தித்துள்ளார். எனவே தான் இன்றைய அரசியல் சூழலில் தவிர்க்க முடியாத கட்சியாக விளங்குகிறது. 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ராமதாஸ். என்னையும், அப்பாவையும் பிரித்தது ஜி.கே.மணி தான் என்று அன்புமணி கூறுகிறார். ஆனால் நான் எந்தவிதத்திலும், யாருக்கும் துரோகம் செய்தது இல்லை.


என் அப்பாவையும் என்னையும் ஜி.கே.மணி பிரித்துவிட்டார் என அன்புமணி கூறுகிறார். என்னை துரோகி என சொல்வது வேதனையாக உள்ளது. நான் அன்புமணிக்கு எந்த வகையிலும்  துரோகம் செய்யவில்லை. அன்புமணியின் செயல்பாடுகளால்தான் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார். அன்புமணியை மத்திய அமைச்சராக்க வேண்டும் என ராமதாஸிடம் நான்தான் சொன்னேன். கூட்டணி பற்றி ஆரம்ப கட்டத்தில் பிற கட்சிகளுடன் நான்தான் பேசுவேன். அன்புமணியை வீட்டை விட்டு வெளியே வரச் சொல்லுங்கள் என ராமதாஸிடம் நிர்வாகிகள் கூறினர். 




உங்கள் மகன் அன்புமணியை நீங்கள் பார்க்காதீங்கள் என நான் சொல்ல முடியுமா. இல்லை நான் சொன்னால் தாவ் ராமதாஸ் கேட்பாரா. பிறகு எப்படி நான் அவர்களை பிரிக்க முடியும்? ராமதாஸும் அன்புமணியும் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும். வீட்டுக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொதுவெளியில் பேசியதால் தான் இத்தனை பிரச்சினை வந்துள்ளன. ராமதாஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி பேசியிருக்கிறார். அன்புமணி மனசாட்சியோடு பேச வேண்டும். ராமதாஸ் உடன் நான் இருப்பதால் தான் அன்புமணி என்னை வசைபாடுகிறார்.


அன்புமணியால் பா.ம.க.வுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது. என் அப்பாவுக்கு அடுத்ததாக உங்களை நினைக்கிறேன் என கூறியவர் அன்புமணி. பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு நான் காரணம் என பேசியிருக்கிறார் அன்புமணி. பாமகவில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே. கட்சியில் பிரச்சினை இருக்கும் போது, விருப்ப மனு வாங்குவது மோசடி வேலையாகும். பாமக நிறுவனர், தலைவர் ராமதாஸ் தான்.


எனக்கு எந்த பதவியும் வேண்டாம். ராமதாஸ் –அன்புமணி ஒன்று சேர தயார் என்றால் நான் கட்சியிலிருந்து விலகத் தயார். அன்புமணி யார் யார் துரோகிகள் என நினைக்கிறோரோ அவர்கள் அனைவரும் பாமகவில் இருந்து விலகத் தயாராக இருக்கிறோம். ராமதாஸ் உடன் அன்புமணி இணைந்து செயல்பட வேண்டும். நானோ என் குடும்பத்தினரோ கட்சியில் இருக்க மாட்டோம். எம்எல்ஏ பதவியை கூட நான் ராஜினாமா செய்கிறேன். வேறு கட்சியிலும் சேரமாட்டோம். மீண்டும் நீங்கள் அழைத்தால் பாமகவில்  வந்து சேர்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!

news

Responsibility Beyond the Grades.. ஆங்கிலத்திலும் கவிதை படிப்போம்..!

news

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்

news

ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

news

துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!

news

திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி

news

தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!

news

மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!

news

என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்