சென்னை: பாமக கட்சியும், சின்னமாக இருக்கும் மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம். அவர்களுடைய திருட்டுத்தனத்தால் எதையும் கைப்பற்ற முடியாது என்று பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
பாமகவில் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பாமக கட்சி செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான பாலு இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கியுள்ளது. இந்த கடிதத்தின் வாயிலாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி தொடர்வார் என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த கடிதத்தின் மூலமாக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி வரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும் தொடர்வார்கள்.
மற்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்களும் அந்த பொறுப்பில் அப்படியே தொடர்கிறார்கள் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் கொடுத்துள்ளது. சமீபகாலமாக பாமகவில் சில குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த கடிதத்தின் வாயிலாக தீர்வு கிடைத்துள்ளது. மேலும் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைமை அலுவலகம் இனி சென்னை தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள இந்த இடம்தான் தலைமை அலுவலகம் என்பதையும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்து இருந்தது.
மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுக்கு பாமகவின் சின்னமான மாம்பழம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியும். பாமக சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுக்கு A பார்ம், B.பார்ம் கையொப்பமிடும் அனுமதியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. டாக்டர் ராமதாஸ் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வரும் காலங்களில் பாமகவில் 2 அணி இல்லை. இனி பாமகவில் 2 அணி கிடையாது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசுகையில், பாமக என்றும் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்திலிருந்து கடிதம் வந்தது என்பது பொய். எங்கள் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இன்னும் விளக்கம் வரவில்லை. அன்புமணியை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கிவிட்டார். பாமக கட்சியும், சின்னமாக இருக்கும் மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம். அவர்களுடைய திருட்டுத்தனத்தால் எதையும் கைப்பற்ற முடியாது. 46 ஆண்டுகளாக பாமகவையும், வன்னியர் சங்கத்தையும் உருவாக்க பாடுபட்டவர் ராமதாஸ். ராமதாஸிடம் இருந்து கட்சியை அபகரிக்க எத்தனையோ முயற்சிகளை ஒரு குழு செய்து வருகிறது. பொதுக்குழு, செயற்குழுவை நீக்கப்பட்ட தலைவர் கூட்டுவதற்கு அதிகாரம் இல்லை.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் இடைவிடாமல் 2 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தால், தேர்தல் ஆணையத்திடம் வருடம்தோறும் மெமோவை கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்தாலும் சின்னம் ஒதுக்கப்படும் என்பதுதான் விதி. தொடர்ந்து இரண்டு வருடங்களாக 5 சதவீத வாக்குகளைப் பெற்று வருகிறோம். அது தொடர்பாக நாங்கள் கொடுத்த கடிதம்தான் இது. 63, நாட்டுமுத்து நாயக்கன் தெரு தான் பாமக கட்சியின் முகவரி. இதனை 10, திலக் தெரு என்ற அன்புமணியின் முகவரிக்கு மாற்றியுள்ளனர். இது யாருக்கும் தெரியாது. மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டதற்கான கடிதம்தான் இதுவே தவிர, அன்புமணிதான் தலைவர் என எங்கும் இதில் குறிப்பிடப்படவில்லை." தேர்தல் ஆணையம் அனுப்பியதாக பாலு காட்டிய கடிதத்தில் அன்புமணியின் பெயர் எங்கேயும் இல்லை.உண்மைக்கு மாறான தகவலைக் கூறியுள்ளார். கட்சிக் கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என பாலு மட்டுமல்ல, வேறுயாராலும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}