- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
முடிந்தது இரவு !
விடிந்தது காலை !
திருப்பள்ளி எழுக!
என் திரிபுரசுந்தரி!
கதிரவன் வருகிறான்!
காரிருள் மறைந்தது!
திருப்பள்ளி எழுக!
என் திருவுளத் தேவி!
கழனியில் உழுதிட
உழவர்கள் செல்கிறார்!
திருப்பள்ளி எழுக!
திருமகள் லட்சுமி!

காப்பிக்குக் கடுந்தவம்
இருக்கிறான் கணவன்!
திருப்பள்ளி எழுக!
அவன் அன்புத் தேவி!
பள்ளியில் பயிலும்
குழந்தைகள் தேடும்!
திருப்பள்ளி எழுக!
என் கலைமகள் சரஸ்வதி!
வாடிய நாட்கள்
ஓடிட வேண்டும்
திருப்பள்ளி எழுக!
உயர்ந்த என் உத்தமி!
ஏழைகள் வாழ
இயன்றதைச் செய்வோம்!
திருப்பள்ளி எழுக!-என்
திருமதி சூர்யா!
திருப்பள்ளி எழுக!
என்னவளே! இனியவளே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
பிரியாணிக் காதல்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
{{comments.comment}}