விநாயர் சதுர்த்தி.. சிலைகள் வைக்க 11 நிபந்தனைகள்.. போலீஸ் அறிவிப்பு

Sep 17, 2023,04:07 PM IST
சென்னை:  விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாக 11 கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை விதித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவுரைகள் அடங்கிய குறிப்பு:

- விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

- தீயணைப்புத்துறை, மின்வாரியம் ஆகியவற்றிடமிருந்து தடையில்லாச் சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.




- சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களைப் பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைப்பிடிக்க உறுதியளித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

-  நிறுவப்படும் சிலையானது அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.

- பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.

- மதவாத வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ முழக்கவிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக் கூடாது.

- சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.





- நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது மத ரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான பலகைகள், விளம்பரத் தட்டிகள் வைக்கக் கூடாது.

- தீ பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து விபத்துகள், அசம்பாவிதங்கள் நிகழாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

- விநாயகர் சிலைகளைக் கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட  நாட்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும். 

- விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வலப் பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!

news

"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

news

ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு

news

எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

news

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

news

ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!

news

டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?

news

சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்