லக்னோ: பிரபல யூட்யூபர் சிம்ரன் யாதவ் கையில் துப்பாக்கியுடன் சாலையில் நடனமாடிய வீடியோ தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் சிம்ரன் யாதவ்.இவர் சோசியல் மீடியாக்களில் தனது ரீல்ஸ் மூலம் பிரபலமானவர். இதுவரை 22.8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்களை பெற்றுள்ளார். அழகு, ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பரதாராகவும் செயல்படுகிறார். இவர் youtube, இன்ஸ்டாகிராம்களில் லைக்ஸ்களை குவிப்பதற்காகவே பல்வேறு வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.
இவற்றில் பல சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. ஏற்கனவே அயோத்தியின் புனித நதியான சரயு நதி கரையில் நின்று நடனம் ஆடுவது போன்ற வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சர்ச்சை கிளப்பியது. சிம்ரன் யாதவ் புனித நதி கரையை கொச்சைப்படுத்தி விட்டார் என சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சிம்ரன் யாதவ் சர்ச்சையில் சிக்கி உள்ளார். நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்லக்கூடிய வழிகளில் வாகனங்களுக்கு இடையூறாக நின்று கொண்டு போஜ்புரி பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். நடனமாடியது மட்டுமல்லாமல் கையில் துப்பாக்கியுடன் நடனமாடி ரிலீஸ் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவருடைய சோசியல் மீடியா பக்கத்தில் இந்த வீடியோவை பார்த்த கல்யாணி சௌத்ரி என்ற வழக்கறிஞர் தனது எக்ஸ்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பட்டப் பகலில் சட்டவிரோதமாக பொது இடத்தில் கையில் துப்பாக்கியுடன் வாகனங்களுக்கு இடையூறாக தேர்தல் விதிமுறைகள் காத்தில் பறக்க விட்டதாக குற்றம் சாட்டி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ வைரலாகியும் இதுவரை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அமைதி காப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை அறிந்த உத்தரப்பிரதேச போலீசார், உடனே வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு லக்னோ போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}