பாட்னா: பீகார் சட்டசபையில் மீண்டும் ஒரு புதிய அரசு பதவியேற்கவுள்ளது. அதே நிதீஷ்குமார்தான் மீண்டும் முதல்வராகப் போகிறார். சட்டசபையில் ராஷ்டிரிய ஜனதாதளம்தான் தனிப் பெரும் கட்சியாக இருக்கிறது என்றாலும் கூட, இதுவரை நிதீஷ் குமார்தான் முதல்வராக இருந்து வருகிறார்.
பீகாரில் 243 சட்டசபைத் தொகுதிகளும் 40 எம்.பி தொகுதிகளும் உள்ளன. இதில் அந்த 40 தொகுதிகளைக் குறி வைத்துத்தான் தற்போது அரசியல் பல்டிகள் அரங்கேறிக் கொண்டுள்ளன. இதை மனதில் வைத்துத்தான் கட்சிகள் காய் நகர்த்திக் கொண்டுள்ளன.
ஆட்சியமைக்க 122 பேர் தேவை
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் 122 ஆகும். ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி 79 உறுப்பினர்களுடன் உள்ளது. அடுத்த இடத்தில் பாஜக 78 உறுப்பினர்களுடன் உள்ளது. நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்திற்கு 45 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ், 19, சிபிஐஎம்எல் 12, ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா 4, சிபிஐ 2, சிபிஎம் 2, அகில இந்திய முஸ்லிமீன் கட்சி 1, சுயேச்சை 1 என உறுப்பினர்களும் உள்ளனர்.
பாஜகவோ அல்லது ராஷ்டிரிய ஜனதாதளமோ ஐக்கிய ஜனதாதளத்தின் உதவி இல்லாமல் ஆட்சியமைக்க முடியாத சூழல் இருந்தது. இதைப் பயன்படுத்தித்தான் நிதீஷ் குமார் தானே முதல்வராக இத்தனை காலம் தொடர்ந்து வருகிறார். ஆர்ஜேடி, பாஜக என மாறி மாறி இஷ்டத்துக்கு கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறார். இதனால் இவரது செல்வாக்கு கரைந்து கொண்டு போவது குறித்து அவர் உணர்ந்ததாக தெரியவில்லை.
சட்டசபையை முடக்க வாய்ப்புள்ளதா?
தற்போது நிதீஷ் குமாரும், பாஜகவும் கை கோர்க்கும்போது அவர்களது பலம் 123 ஆக இருக்கும். அதாவது பெரும்பான்மைக்கு ஒரு சீட் கூடுதலாக இருக்கும். இதுதவிர இந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா கட்சியின் ஆதரவும் கிடைத்துள்ளது. இதனால் கூடுதலாக 4 சீட் ஆதரவு கிடைக்கும். இதனால் பெரும்பான்மைக்குப் பிரச்சினை இருக்காது. அதேசமயம், ஐக்கிய ஜனதாதளத்தை ஆர்ஜேடி உடைக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. ஒரு வேளை அப்படி நடந்தால், சட்டசபையை முடக்கி வைக்க பாஜக முயலும். அதற்கு ஆளுநரும் உதவி புரியலாம். சட்டசபையை முடக்கி வைத்து விட்டு, லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தலாம். இதுதான் பாஜகவின் உண்மையான திட்டமாக உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அதில் எப்படி போட்டியிடுவது என்பது வரை நிதீஷ் குமாரும், பாஜக தலைமையும் பேசி முடித்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.
தேஜஸ்வி யாதவ் என்ன செய்யப் போகிறார்?
தற்போது நிதீஷ் குமார் அனைவரும் எதிர்பார்த்தபடி ராஜினாமா செய்து விட்டதால், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் அடுத்து என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சபாநாயகர் லாலு பிரசாத் யாதவ் கட்சி என்பதால் அவரை வைத்து ஏதாவது அதிரடி காட்ட லாலு பிரசாத் யாதவ் கட்சி முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய அரசியல் சூழல் துணை முதல்வராக உள்ள லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவுக்கு ஒரு ஆசிட் டெஸ்ட்டாக அமைந்துள்ளது. இதில் அவர் அதிரடி காட்டி நிதீஷ் குமாருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினால் அது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதோடு, ராஷ்டிரிட ஜனதாதளத்திற்கும் செல்வாக்கை அதிகரிக்க உதவும் என்பதால் அனைவரின் பார்வையும் தற்போது தேஜஸ்வி யாதவ் பக்கம் திரும்பியுள்ளது.
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
{{comments.comment}}