சென்னை: பொள்ளாச்சி வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கி உள்ளார். மேலும் அனைத்து குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள், மற்றும் இளம் பெண்களை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி நெஞ்சை பதபதைக்க வைத்ததுடன் தமிழ்நாட்டு முழுவதும் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் தொடர் முழக்கங்கள் எழுந்தன.
9 குற்றவாளிகள்: இதன் அடிப்படையில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோவை மகளிர் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டவர்களின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து எதிர் தரப்பு, அரசு தரப்பு சாட்சி வாதங்களை விசாரித்து வந்த நிலையில், வழக்கு இறுதி கட்டத்தை எட்டியது.
அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் இன்று(செவ்வாய் கிழமை) கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட வேண்டுமெனவும், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கடந்த மாதம் 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
தண்டனை விவரம்: இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி நந்தினி தேவி அமர்வில், குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தினர். அப்போது முன்னாள் அதிமுக நிர்வாகி அருளானந்தம் உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார். மேலும் தண்டனை விவரங்கள் பிற்பகலில் அறிவிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் பிற்பகலில் தண்டனை விவரம் வெளியானது.
அதன்படி 9 குற்றவாளிகளுக்கும் சிபிஐ கோரியிருந்தபடி சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல மற்ற குற்றவாளிகளுக்கும் அதிக அளவிலான ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருநாவுக்கரசுக்கு அதிகபட்சமாக 5 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடைசிக் குற்றவாளி அருண்குமாருக்கு மட்டும் ஒரு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த தீர்ப்பு குறித்து சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திர மோகன் கூறுகையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் ஒரு பிழற் சாட்சியம் கூட இல்லை. அதாவது அனைத்து சாட்சியங்களும் தங்களது சாட்சியில் உறுதியாகவும், கடைசி வரை கலங்காமலும் இருந்தனர். அழிக்கப்பட்ட அனைத்து மின்னணு சாட்சியமும் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்டன. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான சாகும் வரை ஆயுள் தண்டனை தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று கூறியிருந்தார். அவர் கூறியபடி தற்போது சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}