சென்னை: முன்ன ஒரு காலத்துல, ஆம்னியில் ஏறி உட்கார்ந்து, பஸ்ஸும் தாம்பரம் தாண்டிட்டா போதும்.. அப்படியே எல்லா பாசஞ்சர்ஸும் பரவசமாக ஆரம்பிப்பாங்க.. "என்ன படம் போடப் போறானோ இன்னிக்கு" அப்படின்னு ஒரு எதிர்பார்ப்பு எகிறும்.. கண்டக்டர் வந்து விசிடியை ஆன் பண்ணி டேப்பை சொருகி படத்தைப் போட்ட பிறகு அதைப் பார்த்து மலரும் பாருங்க நம்ம மூஞ்சிகள் எல்லாம்.. அடேங்கப்பா.. மறக்க முடியுமா பாஸு!
ஆம்னி பஸ்ஸில் படம் பார்த்துட்டே போனா அது ஒரு சொகம்.. சொந்த ஊருக்குப் போவதுன்னாலே வீடியோ கோச் பஸ்ஸாப் பார்த்து டிக்கெட் போடும் ரசிகர் கூட்டம்தான் அப்பெல்லாம் அதிகம்.. இப்பெல்லாம் எத்தனையோ படம் போடத்தான் செய்றாங்க.. ஆனாலும் ஏனோ அந்த பழைய சுகானுபவ உணர்வுதான் வருவதில்லை.
முன்பு தாம்பரம் தாண்டிட்டா சிட்டி முடிஞ்சிரும், பிறகு பெருங்களத்தூர் வந்தது.. அதைத் தாண்டும் வரை பாடாய் இருக்கும்.. இப்ப கிளாம்பாக்கம் என்ற "புது ஆட்டக்காரர்" வந்து விட்டார்.. "ஓஹோ இவர்தான் அந்த வெளியூர் ஆட்டக்காரரா" என்று கரகாட்டக்காரன் சந்திரசேகர் மாதிரி எல்லோரும் கிளாம்பாக்கத்தைப் பார்த்து ஓரக்கண்ணால் பொறாமைப் பார்வை பார்க்கும் நிலையில் இருக்கிறது அந்த புது பஸ் ஸ்டாண்ட்.
நேற்று முதல் சென்னையிலிருந்து வெளியூர் செல்வோர் அனைவரும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டைத் தாண்டுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அந்த அளவுக்கு கூட்ட நெரிசல்... இன்னும் போகிற காலத்தில் செங்கல்பட்டு தாண்டுனாதாண்டி மவனே நீ ப்ரீயா போக முடியும் என்ற நிலைமை வந்துரும் போல.
சரி அதை விடுங்க பாஸ்.. பொங்கல் வந்தாச்சு.. ஜாலியா சிரிச்சு மகிழ சில பல ஜோக்ஸ்களை பார்த்து சந்தோஷிப்போம்.. பழையவை எல்லாம் அழியட்டும்.. புதுச்சா எல்லாம் பிறந்து வரட்டும்.. இருப்பது சிறக்கட்டும்.. வருவது வசந்தமாகட்டும்.. வாழ்வது சுகமாகட்டும்..டும்..டும்..டும்.. போதும் நிறுத்து.. மீம்ஸைப் போட்டுட்டு கிளம்பு.. நாங்க போய் வேற வேலையைப் பார்க்கணும்.. என்ற உங்களது மனக் குரல்.. உரத்துக் கேட்பதால்.. வாங்க போய்டலாம்!
ஒரு வழியா ஊருக்கு வந்தாச்சு

டிக்கெட் கிடைக்கலை புரோ!

சார் இது லீவு கேட்கப் போறவங்க லிஸ்ட்டு!

ஓஹோ இதுதான் பொங்கலா!

ஆமா இப்ப நான் எங்க போகணும்!

உன் ஞாபகங்கள் வலிக்கின்றது!
வாழ்க்கைக்கு வழிகாட்டும் குருமார்களைப் போற்றுவோம்.. குரு பூர்ணிமா சிறப்புகள்
அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோவை முடக்கிய மெட்டா.. மன்னிப்பு கேட்டது!
பழனியை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்திலும் முறைகேடு.. தீவிர விசாரணை
அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…
ஜென் Z போராட்டக்காரர்கள் மாபெரும் சாக்கடைகள்.. கங்கனா ரணாவத் கருத்தால் பெரும் சர்ச்சை
ஜார்ஜ் பெர்னாட் ஷா.. இலக்கியத்தையும் சமூக சிந்தனையையும் இணைத்த அபூர்வ படைப்பாளி!
{{comments.comment}}